ஒரு பக்கம் இறைச்சி ஏற்றுமதி! மறுபக்கம் பசுவதைத் தடைச் சட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 14, 2020

ஒரு பக்கம் இறைச்சி ஏற்றுமதி! மறுபக்கம் பசுவதைத் தடைச் சட்டம்!

பா...வுக்கு ஏன் இந்த இரட்டை வேடம்?

முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி!

பெங்களூரு, டிச. 14- நாட்டில் பசு வதை தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும் பா... அரசுசட்டம் கொண்டு வருகிறது. ஆனால் நாட்டின் பிரத மராக மோடி பொறுப்பேற்றபின் வெளிநாடுகளுக்கு பசு இறைச்சி ஏற்றுமதி செய்வது அதிகரித்துள் ளதாக சட்டப்பேரவை எதிர்க் கட்சி தலைவர் சித்த ராமையா தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பசு இனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பசுவதை தடை சட்டம் கொண்டு வந்துள்ளதாக முதல்வர் எடியூ ரப்பா தெரிவித்துள்ளார். விவசாயி களின் வாழ்வாதாரம் செழிப்பதில் பசுக்களின் பங்களிப்பும் அதிக முள்ளது. ஆனால் பசுவதை தடை சட்டம் முழுமையாக அமல்படுத் தும் பட்சத்தில் வயதான பசுவை பராமரிக்கும் வசதியை மாநில அரசு செய்துள்ளதா? ஒரு பசு மாட்டுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 6 கிலோ தீவனம் கொடுக்க வேண்டும். இதை செலவிட மாநில அரசிடம் போதிய நிதி ஆதாரம் உள்ளதா? மாநில அரசு பசுக் களைப் பராமரிக்க தொழுவங்கள் எத்தனை அமைந்துள்ளது. இதை பராமரிக்க எவ்வளவு ஊழியர்கள் நியமனம் செய்துள்ளது என்பதை புள்ளிவிவரமாக வெளியிட முடி யுமா? பசுவதை தடை சட்டம் கொண்டு வருவதன் மூலம் மாநி லத்தில் குறைந்தபட்சம் 50 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படுவார்கள். மாநிலத்தில் 6 லட்சம் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் தோல் தொழிலில் ஈடுபட்டு வரு கிறார்கள். அவர்களை நம்பி 25 லட்சம் குடும்பங்கள் உள்ளது. பசு வதை தடை செய்வதின் மூலம் அவர்களின் வாழ்வதாரம் பாதிக் கப்படுகிறது. அதற்கு மாற்று ஏற் பாடு அரசின் சார்பில் செய்யப் பட்டுள்ளதா?

பசுவதை தடை சட்டம் செயல் படுத்துவதன் மூலம் மாநிலத்தில் 25 லட்சம் குடும்பங்கள் உள் பட நாட்டில் சுமார் 5 கோடி குடும்பங் களை வீதிக்கு தள்ளும் நிலையை ஏற் படுத்தும் என்பதை ஏன் யோசிக்கவில்லை?

வாரணாசியில் வசித்து வரும் சுவரூபானந்த சுவாமி சரஸ்வதி மீடியா நிறுவனம் ஒன்றுக்கு அளித் துள்ள பேட்டியில், மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தபின், வெளி நாடுகளுக்கு பசு இறைச்சி ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது. இந்த ஏற்றுமதிக்கான உரிமம் சிறுபான்மை வகுப்பினரைக் காட் டிலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர் கள்தான் அதிகம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். ஒரு பக்கம் இறைச்சி ஏற்றுமதி செய்ய அனுமதி வழங் குவது. மறுபக்கம் பசுவதை தடை சட்டம் கொண்டு வருவது, ஏன் இந்த இரட்டை வேடம் என்பது புரியவில்லை என்றார்.

No comments:

Post a Comment