கல்லூரிகளில் 30 ஆயிரம் பேரில் 1.7சதவீதம் பேருக்கு கரோனா சுகாதாரத் துறை செயலாளர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 20, 2020

கல்லூரிகளில் 30 ஆயிரம் பேரில் 1.7சதவீதம் பேருக்கு கரோனா சுகாதாரத் துறை செயலாளர் பேட்டி

சென்னை,டிச.20, தமிழகம் முழுவதும் கல்லூரியில் 30 ஆயிரம் பேருக்கு நடத்திய கரோனா சோதனையில் 1.7 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்தெரிவித்தார்.

சென்னையில் மியாவாக்கி நகர்ப்புற அடர் வனம் உருவாக்கு வதற்காக நடந்த விழாவில் சுகா தாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியதாவது: 

கரோனாவுக்கு வர உள்ள தடுப்பூசியை நம்பாமல் நிரந்தர தீர்வான முகக்கவசத்திற்கு முக்கி யத்துவம் அளிக்க வேண்டும். அனைவரும் அரசின் அறிவுரை களை பின்பற்ற வேண்டும். நேற்று மட்டும் அய்.அய்.டி.-யில் 106 பேருக்கு பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. அண்ணா பல் கலை.யில் 279 பேருக்கு பரிசோ தனை மேற்கொண்டதில் ஒருவ ருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றபடி தொற்று பரவல் எந்த வகையிலும் இப்போது இல்லை.

முன்பு அறிகுறி இருந்தால் மட்டும் வந்து பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண் டோம். தற்போது தமிழக அரசிடம் தேவையான வசதிகள் உள்ளன. எனவே சந்தேகம் இருந் தால் கூட அனைத்து அரசு சுகாதார நிலை யங்களிலும், மருத்துவ மனைகளிலும் இலவச பரிசோ தனை செய்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் இருந்து இதுவரை மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டுள் ளது. அதில், கரோனா உறுதி யானவர்கள் 1.7 சதவீதத்தினர் மட்டுமே. அதேபோல் சென்னை யிலும் கரோனா தொற்று உறுதி யானவர்களின் எண்ணிக்கை 3 சதவீதமாக குறைந்துள்ளது. இவ் வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment