பொய்யான பிரச்சாரங்களால் தி.மு.க.வின் வெற்றியை திசை திருப்ப முடியாது: மு.க.ஸ்டாலின்


சென்னை, நவ. 13- மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள திமுகவின் வெற்றியை பொய் பிரச்சாரங்களால் திசை திருப்பிவிட முடியாது என்று திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,


அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக உயர் நீதிமன்றத்தால் சிபிஅய் விசா ரணைக்கு உட்படுத்தப்பட்ட நாட்டின் ஒரே முதல்வர் பழனிசாமி, ‘தேர்தல் வழக்கு வேறுவிதமாக அமைந்தால் ஸ்டாலின் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது’ என்று பேசியிருக்கிறார். இதன் மூலம் எந்நாளும் நிறைவே றவே முடியாத தன்னுடைய அரசியல் பேராசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.


கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நான் தேர்ந் தெடுக்கப்பட்டது செல்லும் என்று கூறிவிட்டது. தோல்வி அடைந்த வேட்பாளர், என் மீது வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தீர்ப்பு வந்துவிட்டது. அந்த தீர்ப் புக்கு எதிரான மேல்முறை யீட்டை சுட்டிக்காட்டி அரசு விழாவில் முதல்வர் பேசியி ருப்பது நீதிமன்ற அவமதிப்பா கும்.


உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கை மேற்கோள்காட்டி முதல்வர் பேசி வருவது அவர் விரக்தியில் இருப்பதையே காட்டுகிறது. திமுகவை பொறுத்தவரை வழக்குகளை சட்ட ரீதியாக சந்தித்து வெற்றி பெற்று வரும் இயக்கம். சட் டத்தின் மீதும், நீதிமன்றங்க ளின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.


ஊழல் அதிமுகவிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும், தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என் பதுதான் திமுகவின் இலக்கு. இந்த இலக்கை அடைய தின மும் மக்களிடம் செல்கிறோம். மக்கள் பணி, தமிழ்ப் பணி, தமிழர்க்கான நற்பணி, திரா விட இயக்கப் பணி ஆகியவை தான் திமுகவின் கொள்கை.


மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதிமுகவின் வெற் றியை பொய் பிரச்சாரங்கள் மூலம் திசை திருப்பிவிட முடி யாது. மே மாதத்துக்கு பிறகு முதல்வரும், அவரது சகாக் களும் இருக்க வேண்டிய இடம் எது என்பதை மக்கள் ஏற்கெனவே முடிவு எடுத்து விட்டார்கள். அதிமுக ஆட் சிக்கும், முதல்வர் பழனிசாமி யின் பதவிக்கும் ‘கவுன்ட் டவுன்’ மணியை மக்கள் அடித்து விட்டார்கள்.


இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments