வெளிநாடுகளிலிருந்து நிதி பெறும் அமைப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

மத்திய அரசு  அறிவிப்பு


புதுடில்லி, நவ.13  வெளிநாடுகளில் இருந்து  நிதி பெற விரும்பும் என்ஜிஓக்களுக்கு மத்தியஅரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இதுபோன்ற அமைப்புகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்பட்டிருந்தால் மட்டுமே நிதிஉதவி பெற முடியும் என புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.


மத சம்பந்தமான பல்வேறு என்ஜிஓ-க்கள் கல்வி, ஆன்மிகம், சமூக சேவை என வெளிநாடுகளில் நிதி பெற்று இந்தியாவில் முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல ஆண்டுகளாக  குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  இந்த நிலையில், மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து நிதிபெறுவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.


அதன்படி, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் தற்போது மத்திய அரசு சில மாற்றங்களை அறிவித்துள்ளது.


வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது.அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் பங்கேற்கும் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் நிதி உதவியை பெற முடியாது .வெளிநாட்டிலிருந்து நிதி வழங்கக் கூடியவர்கள் என்ன காரணத்திற்காக நிதியை வழங்குகிறார்கள் என்பதற்கான கடிதத்தை சமர்பிக்க வேண்டும். வெளிநாட்டு நிதி பெற விரும்பும் அமைப்புகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்.


இந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ரூபாய் 15 லட்சத்தை நலத் திட்டத்திற்காக செலவிட்டிருக்க வேண்டும். அதேபோல வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெறுவதற்காக அனுமதி கோரி விண்ணப்பிக்கக் கூடிய நிறுவனங்கள், அதற்காக செலுத்த வேண்டிய கட்டணங்களையும் அரசு உயர்த்தியுள்ளது.


ஏற்கெனவே அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள்,  ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளிநாட்டு நிதி உதவிகளை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.


 


இந்திய  நிறுவனங்களால் கரோனா தடுப்பு மருந்தை விநியோகம் செய்ய முடியுமா?


மும்பை, நவ.13  கரோனாவுக்காக தடுப்பு மருந்து தயாரிப்பதில் பல்வேறு நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன. இதனிடையே ‘‘பிபிசர்” என்ற பெயரில் ஒரு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்த மருந்தை எப்போதும் 70 டிகிரி வெப்பநிலையில் வைக்க வேண்டியது அவசியமாம். எனவே, அதே வெப்பநிலையிலேயே வைத்து, பல இடங்களுக்கும் எடுத்துச்சென்று விநியோகிக்க வேண்டியுள்ளது. இதுதான், இந்திய லாஜிஸ்டிக்(பொருட்களுக்கான போக்குவரத்து) நிறுவனங்களுக்கு பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது.


ஏனெனில், அந்தளவு வெப்பநிலையில் எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லும் அளவிற்கு, இந்திய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங் களிடம் வசதியில்லை. அதிகபட்சம் 40 டிகிரி வெப்பநிலையில் பராமரிக்கும் அளவிற்குதான் அவற்றிடம் வசதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.


மேலும், இத்தகைய வெப்பநிலை என்பது உலகின் பல இடங்களுக்குமே பிரச்சினைதான் என்று கூறப்படுகிறது. அதேசமயம், அந்த மருந்திற்கு தேவைப்படும் வெப்பநிலை 70 தான் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.


எனவே, அது உண்மையெனில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.


உண்மையான வெற்றி தேஜஸ்விக்குத்தான்...


சிவசேனா கருத்து


பூனே, நவ.13 “பீகாரில் உண்மையான வெற்றியாளர் ஆர்ஜேடி தலைவர் 31 வயது தேஜஸ்விதான். அவர் தனது கட்சியை தனிப்பெரும் கட்சியாக உருவாக்கிக் காட்டியுள்ளார். அந்த வாய்ப்பை பாரதீய ஜனதா கட்சியால் பெற முடியவில்லை.


பாஜக கூட்டணி அங்கு வென்றிருக்கலாம். ஆனால், அந்த வெற்றியைக் கொண்டாட முடியாது” என்று சிவசேனா கூறியுள்ளது.


Comments