‘நிவர்' புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, நவ. 28- நிவர் புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், நிவர் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத் திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண மாக வழங்கப்படும் என்றும்,புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவார ணம் வழங்கப்படும் எனவும் தெரிவித் துள்ளார்.


மேலும் புயலின் போது உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப் படும் எனக்கூறியுள்ள அவர், பயிர் சேதாரம் கணக்கீடு செய்யப்பட்டு பேரிடர் நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி பாதிப்பு ஏற்படுவதை தடுக்க உரிய திட்டங்கள் வகுக்கப்படும் என உறுதியளித்துள்ள முதலமைச்சர், பயிர் சேதாரம் கணக்கீடு செய்யப்பட்டு பேரிடர் நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும்,


பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தரப்படும் எனவும் கூறியுள்ளார். சேதமடைந்த பகுதிகளை சீர் செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.


 


Comments