பாபர் மசூதி இடிப்பு: உமா தான் பொறுப்பேற்றார் - நீதிபதி லிபரான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 10, 2020

பாபர் மசூதி இடிப்பு: உமா தான் பொறுப்பேற்றார் - நீதிபதி லிபரான்!


”கொரில்லா இயக்கம் போல், டிசம்பர் 6ஆம் தேதி செயல்பட வேண்டும் என்று அவர் கூறியதாக செய்தி வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்தோ, முரணா கவோ இந்த இயக்கத்தின் தலைவர்கள் ஒரு போதும் கருத்து கூறவில்லை


”அதில் சதி இருப்பதை நான் கண்டு பிடித்தேன். அதை நான் இன்னும் நம்பு கிறேன். நான் சமர்ப்பித்த அனைத்து சாட்சி யங்களும் பாபர் மசூதி இடிப்பு என்பது நுணுக்கமாக திட்டமிட்டப்பட்டு நடத்தப் பட்டது தான். உமா பாரதிக்கு இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டது என்பதை இன்னும் நினைவில் கொண்டுள்ளேன். கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்று மசூதியை இடிக்கவில்லை. மனிதர்கள் தான் இடித்தார்கள்” என்று  "இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு" கூறினார்.


லிபரான் ஆணையம், பாபர் மசூதி இடிப்பு வழக்கினை விசாரிக்க 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அறிக்கை 2009ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மற்றும் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பெயரும், இந்த இடிப்பிற்கு மறைமுகமாக அனுமதி அளித்த அன்றைய உ.பியின் மாநில அரசின் செயல்பாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. “அவர்கள் இடிப்பதை தீவிரமாகவோ அல்லது அமை தியான முறையிலோ ஆதரித்தனர்,” என்று அதில் கூறப்பட்டிருந்தது.


கரசேவர்களின் வருகை அங்கு தன்னிச் சையாகவோ, தன்னார்வத்துடனோ நடை பெறவில்லை. மாறாக திட்டமிடப்பட்டு நடைபெற்றது என்று ஆணையம் அறி வித்திருந்தது. அந்த அறிக்கையில் பாஜக தலைவர்கள் அத்வானி, ஜோஷி, பாரதி, ஏ.பி. வாஜ்பேயி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் கள், வி.எச்.பி. தலைவர்கள், மற்றும் அதி காரிகள் உட்பட 60 நபர்களின் பெயர்கள், நாட்டினை இனவாத முரண்பாட்டின் விளிம்பிற்கு இட்டுச் சென்ற குற்றவாளிகள் என்று பட்டியலிட்டது.


என்னுடைய அறிக்கை சரியானது, நேர்மையானது, பயத்தில் இருந்தும் பக்க சார்பில் இருந்தும் முற்றிலும் விடுபட்டவை என்று கூறிய நீதிபதி, வருங்காலத்தினருக்கு, என்ன நடந்தது என்பதை நேர்மையாக விளக்கும் ஓர் அறிக்கையாக அமையும். இது வரலாற்றின் ஒரு முக்கிய அங்கமாகும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், நீதி மன்றத்தின் முடிவு குறித்து அவர் கருத்து கூறவில்லை. நான் சி.பி.அய். விசாரணை குறித்தோ, நீதிபதி குறித்தோ, நீதிமன்றம் குறித்தோ எதுவும் கூறமாட்டேன். அனை வரும் அவர்களின் கடமையை நேர்மை யாக நிறைவேற்றினார்கள் என்று நம்புகின் றேன். நீதிமன்றத்திற்கு வேறுபடுவதற்கு உரிமை உண்டு, அதன் அதிகாரங்கள் அல்லது வேலை குறித்து எந்தவிதமான சர்ச்சையும் இருக்க முடியாது” என்றார்.


2015ஆம் ஆண்டில் ரேபரேலியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி அத்வானி, வாஜ்பேயி ஆகி யோர் எனக்கு முன்பு ஆஜாரானர்கள். நான் கண்டறிந்ததை, நான் என் அறிக்கை யில் சமர்பித்ததிற்கு மாறாக அவர்களாலே எதிர்ப்பு கூற முடியாது. சிலர், இந்த இடிப் பிற்கு பொறுப்பேற்றார்கள். உமா பாரதி பொறுப்பு கூறினார். ஆனால் இப்போது நீதிபதி, உமா பாரதி பொறுப்பு இல்லை என்று கூறினார். இனி என்னால் என்ன செய்ய இயலும், எனக்கு முன் சாட்சி அளித்த சாட்சியங்களிலிருந்தும், சாட்சி களின் கணக்குகளிலிருந்தும், நான் மட்டு மல்ல, எவரும் இது ஒரு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்று நியாயமான முறையில் முடிவு செய்திருக்க முடியும், ”என்று அவர் கூறினார்.


அவருடைய அறிக்கையை மசூதியை உடைத்தது யார், எந்த சூழ்நிலை இது போன்ற நிகழ்வுக்கு வழிவகுத்தது, மசூதி இடிப்பதற்கான உண்மையான ஆதாரம் என்ன என்பதை கண்டுபிடிப்பதே இதன் நோக்கமாகும். சிலருக்கு பக்தி ரீதியான காரணங்கள் இருக்கலாம். ஆனால் அரசி யல்வாதிகளுக்கு, அவர்களுக்கு ஆதர வாக வாக்குகளை உருவாக்க மிக முக்கிய காரணமாக இது இருக்கும் என்று அவர் கூறினார்.


82 வயதாகும் முன்னாள் ஆந்திர மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான இவர், இந்த மசூதி இடிப்பு, முறையான நிர்வாக திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் தடுக்கப்பட்டி ருக்கலாம் என்று கூறினார். இடிப்பினை தடுக்கவோ, மத வெறுப்பு பரவலை தடுக் கவோ எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.


லிபரான் அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்க் தள், வி.எச்.பி, பாஜக, மற்றும் சிவசேனா தொண்டர்கள் அவர்கள் தலை வர்களுடன், மசூதி இடிக்கப்படும் சமயங் களில் நின்று கொண்டிருந்தார்கள். அவர் கள் தீவிரமாகவோ அல்லது செயலற்ற முறையிலோ இந்த இடிப்பிற்கு ஆதரவ ளித்தனர். மதகுருக்கள், சாதுக்கள், நிர்வாகி கள், காவல்துறையினர், கர சேவர்கள் மற் றும் ஊடகத்துறையினர் ஆகியோரும் அங்கு இருந்தனர். அரசியல் ரீதியாக விரும் பத்தக்க முடிவுகளை பெறுவதற்கான, அரசி யல் அதிகாரங்களைப் பெறுவதற்காக இவை அரங்கேறியது என்று அவர் கூறினார்.


அன்றைய உ.பி. அரசு வேண்டுமென்றே இந்த இயக்கம் செயல்பட அனுமதித்தது. மேலும் அயோத்தி, ஃபைசாபாத்தினை நிர் வகிக்கவும் ஆதரவளித்தது. மசூதி இடிப்பு நடைபெற்று முடியும் வரையில் துணை ராணுவத்தை பயன்படுத்தவில்லை. அவ ருக்கு அங்கே நிகழும் அனைத்து விவகா ரங்களும் முழுமையாகத் தெரியும். எந்த வொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை யும் எடுக்க அவர் தயக்கம் காட்டினார், அதற்கான காரணங்கள் விவரிக்க முடியா தது என்றும் அவர் கூறினார்.


இந்தக் கூட்டத்தின் செயல்பாடுகளைத் தடுக்கமுடியாத அளவுக்கு அரசு இல்லை என்று கூறிவிட இயலாது. அதற்கு மாறாக இது முற்றிலும் பரிதாபகரமான, வெட்கக் கேடான வழக்கு. முதல்வரும் அவருடைய கூட்டாளிகளும், அரசுக்கு உள்ளேயும் வெளியேயும், அவரின் கட்சிக்கு உள்ளே யும் வெளியேயும், சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் கட்டட இடிப்பையும், அதன் மூலம் ஏற்பட இருக்கும் கலவரங்களையும் நிறுத்த தேவையான நல்லறிவையும் பொது அறிவையும் தீவிரமாகத் தடுத்து நிறுத்தி விட்டனர். அரசு அலுவலர்கள் குறித்து கூறிய போது, ஆணையம், அரசிடம் இருந்து கிடைக்க இருக்கும் பின்விளை வுகள் குறித்து பயந்து, “கர் சேவகர்கள் அல்லது கர் சேவாவின் மீது எந்தவொரு கட்டுப்பாட்டையும் நிர்வாகத்தால் செய்ய முடியவில்லை, செய்யவில்லை, அல்லது அதை ஒழுங்குபடுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.



அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்டதை ஜோஷியுடன் இணைந்து கொண்டாடும் உமா பாரதி (Express Photo by Kedar Jain)


”அத்வானியால் ராம் ஜானகி யாத்திரை 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, சர்ச் சைக்குரிய நிலத்தில் கோவில் கட்டுவ தற்காக, மக்களைத் திரட்ட நடத்தப்பட்டது. மதுரா, காசி உள்ளிட்ட இடங்களில் இருந் தும்  மக்களை அயோத்தி வழக்கிற்காகத் திரட்டியது, தேசிய அரசியல் கட்சியான பாஜக தான். அரசியல் சாசன மதசார்பற்ற தன்மையை போலி - மதசார்பின்மை என்று அழைத்தது” என்றும் அறிக்கையில் குறிப் பிட்டிருந்தார்.


டிசம்பர் 6, 1992ஆம் ஆண்டு, அத்வானி, ஜோஷி மற்றும் அந்த இடத்தில் இருந்த மற்ற தலைவர்கள், கர சேவகர்களை, சர்ச் சைக்குரிய இடத்தில் இருந்து இறங்கி வர வேண்டும் என்று பலவீனமான கோரிக் கையை முன்வைத்தார்கள். ஆனால் ஒரு கட்டுமானத்தை, அதன் கோபுரத்தில் இருந்து தகர்க்க முடியாது என்பது எவ ராலும் உணர்ந்து கொள்ள முடியும். இந்த தலைவர்கள் யாரும் கர்ப்ப கிரகத்திற்குள் செல்ல வேண்டாம் என்றோ, குவிமாடங் களில் உள்ளிருந்து இடிக்க வேண்டாம் என்றோ கோரிக்கையே வைக்கவில்லை. தலைவர்களின் இந்தச் செயல்கள், ஒருவரின் மறைக்கப்பட்ட நோக்கங்களைப் பற்றியும், சர்ச்சைக்குரிய கட்டமைப்பை இடிப்பதை நிறைவேற்றுவதையும் பற்றி பேசுகிறது.


அன்று மத்தியில் ஆளும் அரசாக இருந்த காங்கிரஸ் கட்சியையும் விமர்சித் துள்ளது இந்த ஆணையம். பி.வி. நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. “மாநில அரசு அதன் தேர் தல் அறிக்கைக்கு எதிராக, தான் நடந்து கொள்ளும் என்று மத்திய அரசு பகற்கனவு கண்டு கொண்டிருந்தது” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சம்பத் ராய், தற்போது, ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளராக இருக்கும் அவர் ராமர் கோவில் கட்டுவதற்கான பொறுப்பில் உள்ளார். ”கொரில்லா இயக்கம் போல், டிசம்பர் 6ஆம் தேதி செயல்பட வேண்டும் என்று அவர் கூறியதாக செய்தி வெளியா னது. அதற்கு மறுப்பு தெரிவித்தோ, முரணா கவோ இந்த இயக்கத்தின் தலைவர்கள் ஒரு போதும் கருத்து கூறவில்லை என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சாட்சிகளின் முன் கணிப்பு கர சேவர்களின் அணி திரட்டல் என்பது தன்னிச்சையாகவோ அல்லது தன் னார்வத்துடனோ நிகழவில்லை மாறாக இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.


 


No comments:

Post a Comment