அரவிந்த் கெஜ்ரிவால் மீது போலியான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பா.ஜ.க. தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

அரவிந்த் கெஜ்ரிவால் மீது போலியான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பா.ஜ.க. தலைவர்


புதுடில்லி, அக். 31 டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல கோடிகள் லஞ்சம் கொடுத்தார் என்று புகார் அளித்த பாஜக டில்லி மாநில தலைவர்களுள் ஒருவரான கபில் மிஸ்ரா தான் கொடுத்த பொய் வழக்கு குறித்து வருத் தப்படுவதாகவும், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.


டில்லி கலவரம் மற்றும் வன்முறைப் பேச்சின்மூலம் பிரபலமான டில்லி பாஜக தலைவரான கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர். தான் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த உடனேயே டில்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் சத்யேந்திர ஜெயின் சுகாதாரத்துறை ஒப்பந்தம் தனக்கு கொடுக்கவேண்டி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல கோடிகள் லஞ்சம் கொடுத்ததாக புகார் கூறினார். இது தொடர்பாக சான்றுகள் தன்னிடம் உள் ளது என்றும் கூறியிருந்தார்.


இதனை அடுத்து சத் யேந்திரஜெயின் தன்மீது பழிசுமத்துவதற்கு, கபில் மிஸ்ராவின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பல முறை நீதி மன்றத்திற்கு வராமல் இருந்த கபில் மிஸ்ராமீது நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருந் தது.


இந்த நிலையில், கபில் மிஸ்ரா தனது வழக்குரைஞர் மூலமாக டில்லி நீதிமன்றத் திற்கு மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தான் சத்யேந்திர ஜெயின் குறித்து பேசிய பேச்சிற்கு  நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.  இத்தகைய தவறு மீண்டும் நிகழாது என்று  மனுவில் தெரிவித்துள்ளார்.


இதனை அவரது வழக் குரைஞர்  நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்தும், தான் மன்னிப்பு கேட்டு  தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இதைப் பதிவிடுவதாக கூறியதையடுத்தும், இவர் மீது நீதிமன்றத்தில் தொட ரப்பட்ட வழக்கை சத்யேந்திர ஜெயின் திரும்பப் பெற்றார். இனிமேல் அரசியல் ஆதாயத்திற்காக பொய் புகார்களைக் கூறக்கூடாது என்று எச்சரித்த டில்லி உயர் நீதிமன்றம்,  இவ்வழக்கை முடித்து வைத்தது.


No comments:

Post a Comment