உலகில் முதல் முறையாக - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 1, 2020

உலகில் முதல் முறையாக

ஒரு நபருக்கு 2 முறை கரோனா உறுதி - வைரசின் மரபணுவில் மாற்றம்


கரோனாவிலிருந்து மீண்ட, ஹாங்காங்கைச் சேர்ந்த 30 வயது ஆணுக்கு 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள ஹாங்காங் பல்கலைக் கழகம் அவரது உடம்பில் தொற்று ஏற்படுத்திய வைரசின் மரபணுவை ஆய்வு செய்துள்ளது.


அதில் முதல் முறை தொற்று ஏற்படுத்திய வைரஸ் மற்றும் 2 ஆவது முறை தொற்று ஏற்படுத்திய வைரசில் காணப்படும் மரபணுக்களில் மாற்றங்கள் உள்ளதாக ஹாங்காங் பல்கலைக் கழகம் கூறியுள்ளது.


கரோனா வைரஸ் தாக்குதல் 2 ஆவது முறை ஏற்படுவது மிகவும் அபூர்வம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


கரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு கரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று இது வரை நம்பப்பட்டது. ஆனால், எத்தனை காலம் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று அறுதியிட்டு எந்த நாடும் இதுவரை கூறவில்லை என்றாலும் குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை எதிர்ப்பு சக்தி உடம்பில் இருக்கும் என நம்பப்பட்டது. அதன் பிறகு எதிர்ப்பு சக்தி மெல்ல, மெல்ல குறையலாம் என்று கூறப்பட்டது. கரோனா வைரஸ்கள் மரபணுவில் மாற்றம் செய்துக்கொள்வதால், ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.


தற்போது கிடைத்துள்ள ஆதாரத்தின் படி ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அதன் மூலம் இயற்கையாக தானே எதிர்ப்பு சக்தி கிடைத்தாலும், மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.


எனவே ஒரு முறை தொற்று வந்தவரும் முகக்கவசம் அணி தல், சமூக இடைவெளி போன்ற நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.


No comments:

Post a Comment