நூல் அரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 10, 2020

நூல் அரங்கம்


நூல்: இந்துவாக நான் இருக்க  முடியாது


(ஆர்.எஸ்.எஸ் ஒரு தலித்தின் கதை)


நூலாசிரியர்: பன்வர் மெக்வன்ஷி


தமிழாக்கம்: செ.நடேசன்


வெளியீடு: எதிர் வெளியீடு 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி- 642 002


விலை: ரூ. 299/-     பக்கங்கள்: 256


 


தனது 13வது வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று பணி யாற்றி அதன் சனாதன வெறி கண்டு வெளியேறி களப்பணி ஆற்றி வரும் ஒரு பத்திரிகையாளரின் நினைவலைகள் அல் லது சுயசரிதையே இந்நூல்.


ராஜஸ்தான் மாநிலத்தில் சிர்த்தியாஸ் என்னும் கிராமத்தில் தலித் சமூகத்தில் பிறந்தவர் இந்த நூலாசிரியரான பன்வர் மெக்வன்ஷி. இவரது 13ஆவது வயதில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது  இவரது புவியியல் ஆசிரியர் இவரை வஞ்சகமாக ஏமாற்றி உடற்பயிற்சி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்த்து வெறி ஏற்றுகிறார். அங்கு தொடங் கியது அவரது இந்துத்துவ பயணம்.  சூரியன் நெருப்புக் கோளம் அதை யாரும் நெருங் கிச் செல்ல முடியாது என்று பள்ளியில் கற்பிக்கும் இவரது ஆசிரியர் ஷாகா பயிற் சியில் சூரியனை எவ்வாறு அனுமன் விழுங் கினார் என்று பாடம் நடத்தியது, தமக்கு முன்பே குழப்பமாக இருப்பதாக தெரிவித்து உள்ளார். ஆனாலும் இவருக்கு ஏற்றப்பட்ட மதவெறி அவரை இந்துத்துவப் பயங்கரவா தத்துடன் பயணிக்கச் செய்தது.


ஆர்.எஸ்.எஸ்  நடத்தும் ஷாகா பயிற்சிப் யில் ஊட்டப்படும் மதவெறி, அதன் அமைப்பு முறை, அங்கு பேசப்படும் பேசு பொருள்கள் ஆகியவற்றை அவர் விவரிக் கும்போது அந்த இந்துத்துவப் பயங்கரவாத கூடாரத்தினுள் நம்மை அழைத்துச் செல் கிறார். அவ்வளவு உணர்வுப் பூர்வமான சொற் களைப் பயன்படுத்தி இந்த நினைவலை களை எழுதியுள்ளார்.


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரச்சார இதழான "பாஞ்சஜன்யா" இதழை படிக்கத் தொடங்கிய காலமுதல் கட்டுக் கடங்காத மதவெறியராக மாறுகிறார்.


அந்த இதழ் யார்? என்றே தெரியாத அறிமுகமில்லாத எதிர்ப்படும் இஸ்லாமியர் களை தமக்கான  கொடூரமான எதிரிகளாக தனக்குக்  காட்டியதை விவரித்துள்ள இடம் மிகவும் கூர்மையாக கவனிக்கத் தக்கதாக உள்ளது. 1990 ஆம் ஆண்டு ராமஜென்ம பூமியை மீட்க நடத்தப்பட்ட கலவர முயற்சியில் பங்கேற்று காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி சிறையில் அடைக் கப்பட்டு பின்பு விடுதலை செய்யப்படுகிறார்.  முழுநேரப் பணியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு செயல்படத் தொடங்கினார். நச்சுத்தன்மை மிக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எத்தகைய பிரிவுகளைக் கொண்டதாக உள்ளது. அதற்கான நிதி எவ்வாறு திரட்டப்படுகிறது. அந்த நிதி எப்படி பயன்படுத்தப்படுகிறது. எம் மாதிரியான பயிற்சிகள் அளிக்கப்படு கின்றன எல்லாம் தெளிவாக விளக்குகிறார். தொடர்ந்து தமது ஆர்வத்தால் - செயல் பாட்டால் ஆர்.எஸ் எஸ்ஸின் முகாமின் தலைவர் அளவிற்கு உயரும் எப்படி அவர் களால் அதற்கு அடுத்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் எனப்படும் உயர்ந்த பதவிக்கு செல்ல முடியாமல் தடுக்கப்படு கிறார். இப்போது மாவட்ட பிரச்சாரக்காக இருந்த இவரிடம் அவருக்கு நடந்த உரை யாடலைப் பதிவு செய்கிறார்.


அந்த உரையாடலில் அவர் பிறந்த ஜாதியை முன்னிறுத்தி அவர் நிராகரிக்கப் படுகிறார்.


இதுகுறித்து அவரது உருக்கமான பதிவு சில வரிகள்:-


அவரது பதிலால் நிலைகுலைந்து போனேன். தாழ்ந்த ஜாதி சமூகத்தில் பிறந்து விட்டதற்காக ஆழமான வலியை உணர்ந் திருந்தேன். ஆனால், இது எவ்வாறு என்னு டைய தவறாகும். என்ன ஓர் இக்கட்டான நிலை எனக்கு இங்கே? சங்க அமைப்பின் புனிதமான பணிக்கு எனது வாழ்வை தியாகம் செய்யத் தயாராக இருந்தேன். ஆனால், எனது ஜாதியின் மீது என்னிடம் கட்டுப்பாடு எதுவும் இல்லை. அது ஒரு தடையாக நிரூபணமானது. படிப்படியாக அதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந் தேன்" என்கிறார்.


சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ராம ஜென்மபூமி கலவரம் தூண் டப்படுகிறது. பில்வாராவில் நடைபெற்ற பேரணி கலவரமாகி காவல்துறையினர் தடியடி துப்பாக்கி பிரயோகம் செய்ததில் சிலர் மரணமடைகிறார்கள். அவர்களது சாம்பல் கிராமம் கிராமமாக ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டு வெறியூட்டப்படு கிறது. அந்த வரிசையில் மெக்வன்ஷி அவர் களின் கிராமத்திற்கும் அந்த ஊர்வலம் வருகிறது.  மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆனந் தக் கூத்தாடிய மெக்வன்ஷி பயணத்தில் வருபவர்களுக்கு தன் வீட்டில் உணவு ஏற் பாடு செய்கிறார். அவரது குடும்பத்தின ரும் நண்பர்களும் அவரிடம் தமது அதிருப்தி களைத் தெரிவிக்கின்றனர். "ஏன் உணவை வீணாக்குகிறாய்? அந்த மனிதர்கள் நம் முடன் உண்ணமாட்டார்கள். போலி வேட தாரிகள்,  பொதுவில் ஒன்று சொல்வார்கள். ஆனால், தனிமையில் வேறு ஏதாவது ஒன்றைச் செய்வார்கள். அவர்கள் நமக்கு எதிராக விஷம் நிறைந்தவர்கள்" என்றார் அவரது தந்தை.


அதற்குப் பதிலளித்த மெக்கன்சி, "சங்க் பற்றி உனக்கு என்ன தெரியும்நான் அவரு டன் அய்ந்து ஆண்டுகளாக இருந்து இருக் கிறேன் நான் மாவட்ட அலுவலகத்தில் தலைவராக இருக்கிறேன். நான் ஏராளமான சுயம்சேவக் வீடுகளில் சாப்பிட்டிருக்கி றேன். சங், தீண்டாமை, ஜாதிப்பாகுபாடு ஆகியவற்றை கொண்ட உங்களது கிராமம் போன்றது அல்ல. அது காங்கிரஸ் நமக்கு கொடுத்த ஒரு விஷயம்" என்கிறார். அந்த உணவை உயர் ஜாதி ஆணவம் கொண்ட சங்பரிவார் கும்பல் சாப்பிட மாட்டார்கள் என்று அவரது குடும்பம் எவ்வளவோ வற் புறுத்தியும் கேட்காமல் பாசத்தோடு மகிழ் வுடன் உணவை த் தயாரிக்கிறார். அந்த ஊர் வலத்தில் ஒருங்கிணைப்பாளர் மெக்வன்சி அவர்களை தனியே அழைத்து, "இங்கே வந்திருப்பவர்களில் சாதுக்கள் மற்றும் துறவிகள் உள்ளனர். அவர்கள் இங்கே சாப்பிட மாட்டார்கள். நீங்கள் பார்சலாக கட்டித் தாருங்கள். நாங்கள் போகும் வழியில் சாப்பிட்டு விடுகிறோம்" என்று சொல்லி வாங்கிச் செல்கிறார்கள் மகிழ்ச்சி யோடு பார்சல் செய்து கொடுத்து அனுப்பு கிறார். ஆனால் அந்த உணவு சாப்பிடப்படா மல் சாலையில் வீசப்படுகிறது. பக்கத்து ஊரில் ஒரு பார்ப்பனர் வீட்டில் நள்ளிரவில் உணவு தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மறுநாள் காலை இந்தச் செய்தியை கேள்வியுற்ற பன்வர் மெக் வன்ஷி அவர்கள் இந்தத் தகவலை நம்பாமல் தானே நேரில் சென்று வீசப்பட்ட இடத்தைப் பார்க்கிறார். தாம் அடைந்த துயரை உருக் கமாகப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களிடம் அவர் கேட்டபோது அவர்கள் தவறிக் கீழே விழுந்துவிட்டதாக விளக்கம் அளிக்கின் றனர். உணவு தவறி விழுந்து இருந்தால் நடு சாலையில் அல்லவா விழுந்திருக்க வேண் டும்? தெளிவாக சாலை ஓரத்தில் உள்ள குழியில் எப்படி விழுந்து இருக்க முடியும்? பூரிக்கான கிழங்கு வைத்திருக்கின்ற பாத் திரம் கொஞ்சம் கூட நசுங்காமல் இருந்தது எப்படி என்று கேட்கிறார். மெக்வன்ஷி அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் சொன்ன ஒரே விளக்கம். நேர்மறையாக சிந்தியுங்கள் செயல்படுங்கள் என்பதுதான்.


அதில் இருந்து தொடங்குகிறது அவரது மனப்போராட்டம். தான் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார். ஒரு கட்டத்தில் எலி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். கொடூர சூழலில் காப்பாற்றப்படுகிறார்.


பின்னர் அங்கிருந்து வெளியேறுகிறார். கல்லூரியில் சேர்கிறார். ஏ.பி.வி.பிக்கு எதி ராக வித்யார்த்தி அதிகாரம் ரக்ஷக் சங் (vars) என்னும் அமைப்பைத் தொடங்கி நடத்து கிறார். அவருடன் பயணிக்க அவரது நண் பர்கள் ஏபிவிபி தூண்டுதலில் கொல்லப் படுகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து பய ணிக்கிறார். ஆசிரியர் பணியில் சேருகிறார். ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சிக் காக செல்லும்போது மீண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அங்கே சரஸ்வதி வந்தனம் உள்ளிட்ட இந்துத்துவா சார்ந்த விஷயங் களை எதிர்க்கிறார்.


பின்னர் ராமாயணம் தொடர்பான பல்வேறு நூல்களைப் படிக்கிறார். டாக்டர் அம்பேத்கர் எழுதிய ராமன் கிருஷ்ணன் பற்றிய நூல், தந்தை பெரியார் எழுதிய சச்சி ராமாயணம் (இராமாயண பாத்திரங்கள் ஹிந்தி மொழி பெயர்ப்பு. தடை செய்யப் படும் பின்னர் தடை நீக்கப்பட்ட புத்தகம்), பூலே எழுதிய  குலாம்கிரி (அடிமைத்தனம்) ஆர்.எஸ். பக்சி எழுதிய இந்துயிசம் போன்ற நூல்களை  படித்து ராமன் என்கின்ற படைப்பு குறித்தும் இந்து மாயை குறித்தும் தாம் அறிந்து கொண்டதாக எழுதுகிறார்.


2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடை பெற்ற  காவி தாலிபான்களின்  மதக் கலவரம் குறித்து எழுதியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியைத் தருகின்றன. பொது இடங் களில் கூட்டு பாலியல் வன்முறைகளை சங் பரிவார் பொறுப்பாளர்களை முன்னின்று செய்ததை அவர் பதிவு செய்துள்ளார். பதி வைப் படிக்கும்போது உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொலை நினை வுக்கு வருகிறது, அத்தகைய ஒரு கொடும் செயலில் ஈடுபட்டவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தும் மனநிலை இவர்க ளுக்கு எங்கிருந்து வருகிறது என்று இந்த நூலைப் படிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது. பின்னர் டைமண்ட் இந்தியா என் னும் ஏட்டினை தொடங்கி இதுவரை தலித் திய செயற்பாட்டாளராகத் தொடர்கிறார்.


அவற்றைப் பதிவு செய்வதுடன், ராஜஸ் தானில் பல்வேறு மதம் சார்ந்த மூட நம் பிக்கைகள், ஜாதி ஆதிக்கம், குறித்த தக வல்களைப் பதிவு செய்கிறார்.


இந்த நூலை எளிய சொல்லாக்கங் களுடன் நேர்த்தியான முறையில் மொழி யாக்கம் செய்து ஆர்வத்தைத் தூண்டி இறுதிப் பக்கம் வரும் வரை அழைத்துச் செல்கிறார் மொழிபெயர்ப்பாளர் செ.நடே சன். தமிழ்நாடு ஆரம்ப ஆசிரியர் கூட்ட ணியின் மேனாள் பொதுச் செயலாளராகச் செயல்பட்ட மொழிபெயர்பாளர். பத்துக் கும் மேற்பட்ட அரிய நூல்களை சுவைபட மொழிபெயர்த்துத் தந்தவர்.


சங்பரிவார அமைப்புகளின் மோசடி களை உண்மையான அனுபவங்களுடன் விவரித்துக் கூறும் இந்த நூல் தமிழில் வருவது தமிழ்நாட்டு மாணவர்கள் இளை ஞர்கள்அனைவருக்கும் மிக்க பயனுள்ள தாக அமையும் என்பதில் எந்தத் தயக்கமும் இல்லை.


- வை.கலையரசன்


No comments:

Post a Comment