வாசிங்டன், செப்.30 செவ்வாய்கோளின் தென் துருவத்திற்கு அருகில் நிலத்துக்கு அடியில் புதைந்து போன மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வு ஒன்றின்போது சுட்டிக் காட்டப்பட்ட நான்காவது ஏரி ஒன்று இருப்பதையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
திரவ நிலையில் நீர் இருப்பு என்பது உயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. எனவே, இந்த கண்டு பிடிப்பானது, சூரிய குடும்பத்தில் வேறு எங்கும் வாழ் வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏரிகள் அனைத்தும் மிகவும் உப்புத்தன்மை வாய்ந்தவை என்று கருதப்படுவதால், இது நுண்ணுயிரிகளின் உயிர் வாழ்தல் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பூமியில் அதிக உப்புதன்மை வாய்ந்த தென் அமெரிக்க பாலைவன ஏரிகளில் உயிரினங்கள் வாழ்வதால் செவ்வாய் கோளின் உப்பு ஏரியில் உயிரினம் வாழ சாத்தியக் கூறுகள் உள்ளது என்று வான்வெளி உயிரியல் ஆய்வாளர் கூறியுள்ளனர். தற்போது செவ்வாய் கோளில் கண்டறியப்பட்டுள்ள ஏரிகளிலுள்ள பனி உருகுவதற்கு தேவையான வெப்பம் கிடைக்காததால், அங்கு காணப்படும் நீர் உப்புகளின் அதிக செறிவுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
No comments:
Post a Comment