மலேசியாவில் பெரியார் பிறந்த நாள் விழா மலாக்கா மாநகரில் பெரியார் மய்யம் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 30, 2020

மலேசியாவில் பெரியார் பிறந்த நாள் விழா மலாக்கா மாநகரில் பெரியார் மய்யம் திறப்பு


மலாக்கா, செப். 30- பெரியாரின் 142ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மலாக்கா விலுள்ள தமிழ் பள்ளியில் பெரியார் மய்யம் திறக்கப்பட்டது. சுமார் 600 நூல் கள் இந்த மய்யத்திற்கு வழங்கப்பட்டது. 
இந்த பள்ளியில் 400க்கு மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள். சுமார் 44 ஆசிரியர்களும் பணி புரிகின்றார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி கோகிலம் வரவேற்புரையாற்றினார் புலவர் கு.க. இராமன்,  பெரியாரைப் பற்றி ஒரு கவிதை பாடினார். தோட்ட நிர்வாகிகள் மன்றத்தின் தலைவரும், பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலே சிய தலைவருமான மு. கோவிந்தசாமி இந்த மய்யத்தை திறந்து வைத்து உரை நிகழ்த் தினார்கள்.
அவர் தமது உரையில் பெரியார் இரண்டு முறை மலாக்கா மாநகருக்கு வருகை புரிந்து இங்குள்ள மக்களை சந்தித்துள்ளார். 
இங்குள்ள தமிழர்களின் ஏழ்மை நிலை குறித்து அந்த காலகட் டத்தில் இந்த நாட்டின் முதல் கல்வி அமைச்சராக இருந்த டத்தோ க்லௌ  துரைசிங்கம் அவர்களை சந்தித்து இங் குள்ள தமிழர்களுக்கு உதவும்படி பெரி யார் வேண்டுகோள் விடுத்த செய்தியை யும், தமிழ் மொழி, தமிழர் வளர்ச்சிக்கு பெரியார் ஆற்றிய பணிகளையும் விவரித்தார்.


120 பள்ளி மாணவர்களுக்கு பெரி யார் பிஞ்சு மற்றும் பெரியாரின் கட்டு ரைகள் அடங்கிய மக்கள் ஓசை நாளிதழ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.ஆசிரி யர்களுக்கு அறிஞர் அண்ணா,  டாக்டர் கி.வீரமணி அவர்களின் நூல்கள் அன் பளிப்பாக வழங்கப்பட்டன. இந்த நிகழ் வில் முதுபெரும் பெரியார் தொண்டர் கோ ஆவுடையார் பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் இந்திரன், பொறுப் பாசிரியர் திருமதி திலகம் மற்றும் பல ஆசிரியர்கள் பங்கேற்று  சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment