தேசிய ரத்ததான தினம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 30, 2020

தேசிய ரத்ததான தினம்


அக்டோபர் 1ஆம் தேதி
ஜாதி, மதங்களை இணைக்கும் நாள்
சக மனிதரை நேசிக்கும் நாள்
மனித உயிர்களை காக்கும் நாள்
கரோனா காலத்தில் மக்கள் பல்வேறு நோய்களின் தாக்கம் காரணமாக பாதிக்கும் நிலை உருவாகிறது.  
இறப்பு என்பது மிக குறைந்த அளவில் இருப்பினும்,  பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நெருக்கடியை உணர வேண்டிய பொறுப்பு மனித சமூகத்திற்கு ஏற்படவேண்டும். ஒரு குடும்பத்தில்ஒருவர் ரத்தப்பற்றாக்குறை காரணமாக உயிர் இழக்கும் சூழ்நிலை ஏற்படும்போது, அக்குடும் பத்தில் குறைந்தபட்சம்  6 குடும்ப உறுப்பினர்களை மனதளவில், உடலளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.


ஒருமுறை ஒருவர் வழங்கும் குருதிக்கொடை 4 உயிர்களை காக்கும் வலிமை உடையது. 4 உயிர்களை காப்பதுமூலம், 24 குடும்ப உறுப்பினர்களின் மனங்களை காப்பாற்றிய உச்சகட்ட மனிதநேய கடமையை ஆற்றிய உணர்வு குருதிக்கொடையாளர்க்கு ஏற்படுகிறது. கரோனா காலத்தில் அழைப்புக்கு காத்திருக்காமல்,  இளைஞர்கள் தாமாகவே (Voluntary)  ரத்தவங்கிக்கு சென்று குருதிக்கொடை வழங்கவேண்டும்.


இந்தியாவுக்கு தேவை ஆண்டு ஒன்றுக்கு  400லட்சம் யூனிட் ரத்தம். ஆனால் ரத்ததானத்தின்மூலம் 40 லட்சம் யூனிட் மட்டுமே கிடைக்கிறது. மிகப்பெரிய பற்றாக்குறை உள்ளது.


தொலைவில் உள்ள ரத்த வங்கியை/ குருதிக்கொடையாளர்களை தொடர்புகொள்வதை தவிர்த்து ஒவ்வொரு சாலையிலும் 18 வயதுக் குமேற்பட்ட இளைஞர்கள் குழுவாக செயல்பட்டு,   குருதியைவழங்க முன்வரவேண்டும்.


இந்தியாவில் இளைஞர்கள் உடல்பருமன், வேலைபளு, மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் இதயம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.


குருதிக்கொடையின்மூலம் தேவையற்ற கலோரிகள் கரைக்கப் பட்டு, மாரடைப்புநோய் வருவது பெருமளவில் தவிர்க்கப்படுகிறது.தாயின் கண்ணீர் ஒரு குழந்தையை காப்பாற்றுவதில்லை, ஒருவரின் குருதிமட்டுமே குழந்தையை காப்பாற்றும்.


ரத்தத்தை உற்பத்தி செய்ய எந்த தொழிற்சாலையும் இல்லை, மனிதர்களின் குருதிக்கொடை மூலமே அது முடியும்.
தோழமையுடன்
சைதை இரா.எத்திராஜன்


No comments:

Post a Comment