செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 1, 2020

செய்தித் துளிகள்....

* ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் (அமராவதி - விசாகப்பட்டினம் - கர்னூல்).


* மருத்துவர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.


* காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் மெகபூபாவுக்குத் தடுப்புக் காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு.


* ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அண்ணாவின் பெயரும், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரும், சென்னை மெட்ரோ கோயம்பேடு ரயில் நிலையத்துக்கு ஜெயலலிதா பெயரும் சூட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.


* பிளஸ் 1 பொதுத் தேர்வில் 96 விழுக்காடு இருபால் மாணவர்கள் தேர்ச்சி. (பிளஸ் 1 தேர்வில் வெற்றி பெறாதவர்கள் பிளஸ் 2 படிப்பைத் தொடரலாம்).


* சென்னை மாநகராட்சிப் பள்ளி பிளஸ் 1 தேர்வில் 95 விழுக்காடு வெற்றி.


* திருமணத்தில் 50 பேர், இறுதி நிகழ்ச்சியில் 20 பேர் அனுமதி - 7 ஆம் கட்ட ஊரடங்கை ஒட்டி அரசாணை.


* கரோனாவால் ஆட்டோக்களுக்குப் போதிய சவாரி கிடைக்காததால், ஆட்டோக்களில் காய்கறி விற்பனை.


* சென்னை மாநகராட்சியில் 35 பொறியாளர்களுக்குக் கரோனா தொற்று.


* கரோனா நோயாளிகளுக்கு  வழங்கப்படும் மருந்து கள்ளச் சந்தையில் விற்பனை - அரசு எச்சரிக்கை!


* போதை வெறியில் கிருமி நாசினியைக் குடித்த 13 பேர் ஆந்திராவில் மரணம்.


* பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ, மது அருந்தினாலோ சட்டப்படி நடவடிக்கை - அரசாணை வெளியீடு.


No comments:

Post a Comment