செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 9, 2020

செய்தித் துளிகள்....

* துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் கோரும் வழக்கில் 4 வாரங்களில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் தாக்கீது.


* தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்திட அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல் அமைச்சர் பழனிச்சாமி கோரிக்கை.


* அ.தி.மு.க. அமைச்சர் தங்கமணிக்குக் கரோனா தொற்று - எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விசாரிப்பு! ஏற்கெனவே 9 எம்.எல்.ஏ.க்கள் பாதிப்பு.


* தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வந்த போலீஸ் நண்பர்கள் குழு கலைப்பு - அரசு ஆணை


* ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைத் திருப்பி கொடுக்க அரசு ஆணை.


* ஊழியருக்கு ஏற்பட்ட கரோனாவால் புதுவை ஆளுநர் மாளிகை மூடப்பட்டது. ஆளுநர் கிரண்பேடிக்கு மருத்துவப் பரிசோதனை.


* அரசுப் பள்ளி மாணவர் களுக்கும் இணையத்தின் மூலம் வகுப்பு - வரும் 13ஆம் தேதி முதல் தொடரப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


*  இன்று முதல் 19ஆம் தேதி வரை சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடல்.


* லடாக்கில் சீன இராணுவ முகாம் முழுமையாக விலகல்.


* அண்ணல் அம்பேத்கர் வீடுமீது சமூக விரோதிகள் கல்லெறிந்து தாக்குதல், கண்ணாடி சேதம்!


No comments:

Post a Comment