கழகச் சட்டத் துறை அறிவிப்பு - கழகத் தோழர்களின் கவனத்திற்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 31, 2020

கழகச் சட்டத் துறை அறிவிப்பு - கழகத் தோழர்களின் கவனத்திற்கு...

கடந்த சில ஆண்டுகளாக சங்பரிவார் அமைப்பு களின் நடவடிக்கைகள், மிகத் தீவிரமாக தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இருந்து வருகின்றன. இதற்கு மறைமுகமாக ஆளுங்கட்சியும் சில பத்திரிகைகளும் துணை நிற்கின்றனர். இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் மதக்கலவரங்கள் இல்லாமல் ஓர் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது.


இதனை எப்படியாவது உடைத்து இந்து மதவெறி விஷத்தை ஏற்ற வேண்டும் என்று துடியாய்த் துடிக் கிறார்கள் காவிகள். அவர்கள் கொடுக்கும் புகார்களை உடனே பதிவு செய்து கைது நடவடிக்கையினை வேக வேகமாகச் செய்வதும், விசாரணையில் தெரிவித்ததாக உண்மைக்கு புறம்பான தகவல்களை காவல் துறை யினரே ஊடகங்களில் வெளியிடுவதும், இந்து மத வெறியினைப் பரப்புவதற்கு முதன்மையான அள விலே பாதுகாப்பு அளித்து அதை வேடிக்கை பார்ப் பதில் தொடங்கி அவர்களுக்கு எதிராகக் கொடுக்கப் படும் புகார்களைப் பெறாமல் அலட்சியப்படுத்துவதும், அப்படியே வாங்கினாலும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படாமல் பிறகு நாம் நீதிமன்றம் சென்றவுடன் அவசர அவசரமாக வழக்கினைப் பதிவு செய்வதும், பிறகு அவற்றின்மீது விசாரணை நடத்தாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பதும், நீதிமன்றம் சென்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு வாங்கி வந்தாலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சம்மந்தப்பட்ட காவல் துறை அதி காரிகள் மீது தாக்கல் செய்யப்படும் வரை அமைதியா யிருந்து பின்பு ஏனோ தானோ என்று குற்றவாளிகள் தப்பிக்கும் வகையில் குற்றப் பத்திரிகையினைத் தாக்கல் செய்வதுமாகக் காவல் துறையினர் நடவடிக் கைகள் காவிகளை ஊக்கப்படுத்துவதாக உள்ளன.


இணையதளங்களில் தொடர்ச்சியாக முஸ்லிம், கிறித்துவ எதிர்ப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளது. மேலும் திராவிட இயக்கத் தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலை ஞர், ஆசிரியர் கி.வீரமணி, தளபதி மு.க.ஸ்டாலின், வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போன்றவர்களை இழித்தும் பழித்தும், புள்ளிவிவரங்கள் என்ற பெயரில் தவறான தகவல்களைக் கூறி வீடியோ போடுவதும், அந்த வீடியோவிற்குக் கீழே அருவெறுப்பான வார்த் தைகளால் விமர்சனம் செய்வதுமான வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து வருகிறார்கள்.


இது தொடர்பாக, புகார் கொடுத்தால் போலீஸார் கண்டுக்கொள்வது கிடையாது, நீங்கள் தனி புகார் கொடுத்து (Private Complaint) நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனுவினைத் திருப்பி விடுகிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி, அவதூறு பரப்பி வரு கிறார்கள். அதிலே பதிவு செய்யப்படும் செய்திகள் யாவும் ஆபாசம், அருவெறுப்பின் உச்சமாக உள்ளன. இது தொடர்பாகப் புகார் கொடுத்தால் வழக் குப் பதிவு செய்யாமல் உயர் நீதிமன்றம் சென்றவுடன் “நாங்கள் மேற்படி முகநூல் கணக்கை முடக்க நட வடிக்கை எடுத்துள்ளோம்” என்று தெரிவிக்கிறார்கள். பின்பு போலி முகநூல் கணக்குத் தொடங்கிய நபர்களே அதனை முடக்கி விடுகிறார்கள்.


கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெயரில் இப்படி போலி முகநூல் பதிவு செய்ததை எதிர்த்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வட சென்னை இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன் Crl.O.P 2416/2020 வழக்கினைத் தாக்கல் செய்தார். காவல் துறை முகநூல் முடக்கப்பட்டுள்ளது என்று சொன்ன தன் பேரில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் முக நூல் கணக்கு தொடங்கிய நபர் யார், ஆபாசப் பதிவு களை பதிவிட்டவர்கள் யார் யார் என்பதைப் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்படவும் இல்லை, வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அந்தப் பெயரிலேயே மீண்டும் வேறு கணக்கு தொடங்கி நடத்துகிறார்கள்.


அதே சமயத்தில் முதல்வர், பிரதமர், சங்பரிவார் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் பற்றி சாதாரணமாக கமெண்ட் போட்டால் கூட வழக்குப் பதிவு செய்து உடனே கைது செய்கிறார்கள். பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கும் ஒரு நபர் கடந்த சில ஆண்டுகளாக தந்தை பெரியார் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் பேசும் பேச்சுக்கள் அநா கரிகத்தின் உச்சம் மட்டுமல்ல அவை தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களாகும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் “மயிரு” என்று பேசி அவதூறு செய்தது மட்டுமின்றி, காவல்துறை அதிகாரிகளையும் நேருக்கு நேராக சகட்டு மேனிக்குத் திட்டியும்கூட காவல்துறை வழக்குப் பதிவு செய்ய மறுக்கிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையிடம் வழக்குப் பதிவு செய்ய மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்கும் சூழ்நிலையில்தான் காவல் துறையின் நிலைமை உள்ளது. சில நாட்களாகத் தந்தை பெரியாரையும், நமது தலைவர் ஆசிரியர் அவர் களையும் திராவிடர் கழகத்தையும் நமக்கு தொடர்பற்ற சில நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி, வலைதளங் களில், தனியார் தொலைக்காட்சிகளில் சங்பரிவார் அமைப்பினர் அவதூறு கிளப்பியும், சில ஊர்களில் காவல்துறை வசம் பொய்ப் புகார் அளித்தும் வருகிறார் கள். அவர்கள் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றம் வந்து, சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளித்து, குறுக்கு விசாரணையைத்தாங்க சக்தியில்லாமல் திணறப்போகும் காட்சியினை இந்த நாடு பார்க்கத்தான் போகிறது. அமைதியான வாழ்வு, சகோதரத்துவம், மதச்சண்டை யால் வரும் ஆபத்து இவற்றிற்கு அரணாக இருப்பது பெரியாரும் அவர்தம் தொண்டர்களும்தான் என் பதை மக்கள் புரிந்துவைத்துள்ளனர். இவர்களின் சல சலப்புகள் ஒருபோதும் நம்மை சலனப்படுத்த முடி யாது. அதே சமயத்தில் காவல் துறையினர் தங்கள் கடைமையினைச் செய்ய தவறும் பட்சத்தில் நம் கழகத் தோழர்கள் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகள் என்னவென்பதைப் பார்க்கலாம்.



  1. முகநூல், ட்விட்டர், YouTube, மற்றும் சில வலைத்தள முகவரிகளில் வரும் ஆபாசமான, அரு வெறுப்பான, ஆதாரமற்ற பதிவுகளுக்கு உடனடியாக நம் தோழர்கள் நாகரீகமாக மறுப்பு அளிக்க வேண்டும். அதற்கு மறுப்பாக “அசிங்கமான, ஆபாச வார்த்தை கள்” பதிவிடுவோர் மீது முகநூல் (facebook) நிர்வா கத்திடம் புகார் அளிக்க (Report) வேண்டும்/ ஆதாரத் தோடு ரிப்போர்ட் செய்வதன் மூலம் முகநூல் ஆபாசப் பதிவுகள் மீண்டும் வராமல் தடுக்கப்படும். ஆதாரமற்ற தகவல்கள், ஆபாச வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பதிவிடு வோர் மீது அந்தப் பதிவினை அப்படியே Screen Shot எடுத்தும், அது வெளியிடப்பட்டுள்ள இணைப்பை (Link) எடுத்தும் உடனடியாக Cyber Crime Police க்கு உங்கள் முகவரி, தொலைபேசி எண், முக்கியமாக உங்கள் E-Mail முகவரியோடு புகார் அனுப்ப வேண்டும்.


Lalitha Kumari Vs State of U.P. & ors. 12.11.2013  என்ற வழக்கில் உச்சநீதிமன்றம், புகார்தாரர்கள் கொடுக்கும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத் தில் காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. புகார் அனுப்பி மூன்று நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்களது மேல் அதி காரிக்கு ஒரு கடிதத்தோடு ஏற்கெனவே அனுப்பிய புகார் ஆதாரங்களோடு புகார் அனுப்ப வேண்டும், அது மட்டுமன்றி மின்னஞ்சலில் அளிக்கும் புகாரினை அப்படியே ஒரு காப்பி எடுத்து ஆதாரங்களோடு காவல் ஆய்வாளருக்கு அல்லது உதவி ஆய்வாள ருக் குப் பதிவுத் தபால் ஒப்புகை அட்டையுடன் (RPAD) அனுப்ப வேண்டும். அதன்பிறகும் வழக்குப் பதிவு செய்ய மறுத்தால் தொடர்புடைய குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 156(3) குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவின்படி வழக்குப் பதிவு செய்ய நாம் மனு செய்ய வேண்டும். அதில் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் சென்னை உயர் நீதி மன்றத்தை அணுகி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கலாம்.



  1. சென்னை போன்ற நகரங்களில் மட்டுமில்லா மல் பல ஊர்களில் உள்ள காவல் நிலையங்களில் நமது புகார்களை வாங்குவதற்கு மிக நீண்டநேரம் அலைக் கழிப்பார்கள். அப்பொழுது போலீசார் தங்களைத் தொடர்பு கொள்ளப் பயன்படுத்த வேண்டிய தொலை பேசி எண்களின் மூலம் தொடர்பு கொண்டு புகாரினை குரல்வழி மூலமாக (Voice) பதிவு செயலாம். குறைந்த பட்சம் மூன்று மணி நேரத்திற்கு மேலாகக் காக்க வைத்து அலைக்கழிக்கும் பட்சத்தில் அவர்களின் மேல்அதிகாரிக்கும் தொடர்புடைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அவர்களுக்கும் நீங்கள் வந்து காத்திருப் பதையும் புகாரின் விவரத்தையும் சுருக்கமாக எழுதி, புகாரினை அப்படியே ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்கலாம். அதை தொடர்புடைய அலு வலர் பார்த்துவிட்டால் நீல நிறத்தில் குறியீடு வரும் அப்படி வந்தால் அவர் அதனைப் பார்த்துவிட்டதாக அர்த்தமாகும், எனவே அதன் பேரில் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகலாம். சில காவல் துறை அதிகாரிகள் மற்றும் கீழ் நிலைக் காவலர்கள் புகாரை வாங்க மறுத்து அருவெறுப்பாகவும், ஆபாச மாகவும் திட்டும் பட்சத்தில், கூடுமானவரை உங்கள் செல் பேசியினால் படம் பிடித்து அதை மேல் அதி காரிக்கு அனுப்புங்கள். மேல் அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்கத் தயங்கும் பட்சத்தில் உடனடியாக “தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம், திருவரங் கம் இல்லம், 143, கிரீன் வேஸ் சாலை, சென்னை-28" என்ற முகவரிக்கு என்ன நடந்ததோ அதை அப்படியே வரிவிடாமல் எழுதி எந்த எந்த வார்த்தைகளை சம் பந்தபட்ட அதிகாரிகள் கூறி அவமதிப்புச் செய்தார்கள் என்று தெளிவாகக் குறிபிட்டுப் புகார் அனுப்புங்கள்.

  2. நமது தன்மானத்தை உரசும் வகையில் எந்த காவல்துறை அதிகாரிகள் பேசினாலும் அவர்கள் மீது குற்றவியல் நீதிமன்றத்திலும், உரிமையியல் நீதிமன்றத் திலும் வழக்குத் தாக்கல் செய்து அதிகபட்சமாக இழப்பீடு கேளுங்கள். தொடர்புடைய அதிகாரிகள் பதவி உயர்வுப் பெறுவதற்கான சூழலில் பதவி உயர்வு பட்டியலில் பெயர் இருந்தால் அவருக்குப் பதவி உயர்வு தரக் கூடாது என்று மனு செய்யுங்கள். அந்த மனுவின் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள். காவல் நிலையாணைகள் (Police Standing Orders) பிரிவு 506-ன் படி காவல் துறையினரின் விசாரணை பாரபட்ச மின்றி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இதை வேண்டுமென்றே மதிக்காமல் பாரபட்சமான விசா ரணை நடத்தும் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து நமது வழக்கு விசாரணையினை வேறு அதிகாரிக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்று மாவட்டக் காவல் துறை அதிகாரி, காவல் துறை இயக்குனர் ஆகியோ ருக்கு மனு செய்யுங்கள். அந்த மனு உத்தரவு பிறப் பிக்காமல் இருக்கும் போது உடனடியாக உயர் நீதி மன்றம் செல்லுங்கள்.

  3. நாம் புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சங்பரிவார் அமைப்பினர் சிறையிலி ருந்து ஜாமீன் மனு தாக்கல் செய்யும் போதும் அல்லது அமர்வு நீதிமன்றம் அல்லது சென்னை உயர்நீதிமன் றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யும் போதும் நமது வழக்கறிஞர்களிடம் சொல்லி, கவனமாகக் கண் காணித்து இடை நிலை மனு (Intervening Petition) தாக்கல் செய்து அவர்களுக்கு ஜாமீன் (அ) முன் ஜாமீன் கொடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதன் மூலம் அவர்கள் ஜாமீனில் வெளிவருவது தள்ளிப் போடப்படும். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 167(a)(i)(ii) படி தொண்ணூறு நாட்கள், அறுபது நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும். நமது தோழர்கள் நாம் கொடுத்த புகார்களின் மீது புலன் விசாரணை செய்யா மல் நிலுவையில் வைத்திருக்கும் வழக்குகளைப் பட்டியல் எடுத்து, எந்த எந்த வழக்குகளில் புலன் விசாரணை செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருக்கின்றதோ அந்த வழக்குகளின் பட்டியலை உடனடியாகத் தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

  4. ஏற்கெனவே குறிப்பிட்டபடி தமிழ்நாடு காவல் நிலையாணைகள் (Police Standing Orders) படி எந்த ஒரு வழக்கு விசாரணையும் பாரபட்சமின்றி நடைபெற வேண்டும் அப்படி பாரபட்சமின்றி விசா ரணை நடத்தாமல், ஒரு சார்பாக விசாரணை நடத்தும் காவலர்கள், பாரபட்சமான விசாரணை நடத்தும் அதிகாரிகள் மீது உடனடியாகப் புகார் அளிப்பதோடு, உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு தோழரின் கடமை என்பதை உணரவேண்டும்.

  5. நமது கழகத் தோழருக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் உடனடியாக நகல் மனு போட்டு குற்றப் பத்திரிகையினைப் பெறவேண்டும். அதை உடனடியாகத் தலை மைக் கழகத்திற்கு அனுப்பிவைத்து மேற்படி வழக்கு களை இரத்து செய்ய (Quash) சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய கழகத் தோழர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், இதற்காக அந்த அந்தப் பகுதியிலுள்ள கழகத் தோழர்களுடன் கலந்து பேசி ஏற்பாடுகளை துரிதமாகச் செய்ய வேண்டும்.

  6. பல வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை, கீழமை நீதிமன்றத் தில் நடைபெறாமல் உள்ளது. அந்த வழக்குகளின் பட்டியலைத் தயாரித்து, தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக் கின் விசாரணையை முடிப்பதற்கு உரிய உத்தரவுகளை உயர் நீதிமன்றத்தில் பெறுவதற்குக் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

  7. YouTube, Face book, Whatsapp, twitter  ஆகியவற்றில் பேசும் சங்பரிவார் அமைப்பின ரின் பேச்சுக்களில் ஆதாரமற்ற தகவல்கள் இருக்கும் பட்சத்தில் அதைக் குறிப்பிட்டு உடனடியாகப் பதி விறக்கம் செய்து, எப்படி தவறாக உள்ளது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு Cyber Crime Police-க்கு புகார் அளிக்க வேண்டும். நமது கழகத்திற்குத் தொடர் புடைய செய்தி மட்டுமில்லாது காந்தியார் கொலை வழக்கு, எம்.ஜி.ஆர் பற்றிய தவறான தகவல்கள், நேருவை அசிங்கமாக சித்தரிக்கும் பதிவுகள், அண்ணா, கலைஞர் குறித்த அவதூறுகள், கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர் பற்றிய தவறான பதிவுகள் போன்றவற் றைக் கூட நம் தோழர்கள் கவனமாகப் பார்த்து அதன் மீது நடவடிக்கை எடுக்க உரிய மனுவினை அளிக்க வேண்டும்.

  8. அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ள சங்பரிவார் அமைப்பினர் யார் யார் என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மனுக் கொடுத்து கேளுங் கள் அல்லது அந்தந்த நீதிமன்றங்களில் இது பற்றி நமது வழக்கறிஞர்கள் மூலம் தகவல் பெற்றுக் கொள்ளுங்கள். அதிகபட்ச வழக்குகள் நிலுவையிலிருக்கும் நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், மாநகரங்களில் காவல் ஆணையர்களிடமும் புகார் செய்யலாம். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110-ன் கீழ் அந்தந்த நிர்வாகத்துறை நடுவர்களிடம் (Executive Magistrates) நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் செய்ய வேண்டும். அதன் மூலம் அதிக வழக்கு நிலுவையில் இருக்கும் சங்பரிவார் அமைப் பினர் நன்னடத்தைப் பிணையம் தருவதற்கு நிர்வாகத் துறை நடுவர் கோருவார்.

  9. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அதிக மான குற்றப்பத்திரிக்கை மற்றும் தண்டிக்கப்பட்ட குற்றங்கள் செய்த நபர்களை தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் பிரிவு 746-ன் கீழ் ரவுடிப் பட்டியலில் சேர்க்க வேண்டும் (History Sheet), மேலும் அந்தப் பட்டியலை பராமரிக்க வேண்டுமென்றும் சொல்லப் பட்டுள்ளது. இந்த அடிப்படையில் எந்தெந்த சங்பரி வார் அமைப்பினர் மீது History Sheet நிலுவையி லிருக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்து அது முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளித்து கேட்டுப் பெறுங்கள். History Sheet முறை யாகப் பராமரிக்கப்படாத சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க அந்த அந்த மாவட்ட உதவி கண்காணிப்பாளரிடம் மனு செய்யுங் கள். நாம் அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் படி அவர்களைக் காரணம் கேட்ப தோடு சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து உரிய நிவாரணத்தை நாம் பெறலாம்.

  10. சங்பரிவார் அமைப்பினர் பெரும்பாலானோ ருக்கு தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்குகிறது. இந்த போலீஸ் பாதுகாப்பை வைத்துக்கொண்டு பலர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டும், சட்ட விரோத நட வடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர். அதற்கு போலீஸ் பாதுகாப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்து கின்றனர். அப்படி நமக்குத் தகவல் வரும்பட்சத்தில் உடனடியாகக் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், தமிழக அரசின் உள்துறைச் செயலாளருக்கும் போலீஸ் பாதுகாப்பை விலக்க மனு அளிக்க வேண் டும். தவறும் பட்சத்தில் உரிய பரிகாரத்தினை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப் பேரானை (Writ) மனு தாக்கல் செய்து அதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

  11. மத்திய அரசின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை முறையாக ஒரு கருவியாகப் பயன் படுத்தி சங்பரிவார் அமைப்பினரின் மதக் கலவர நோக்கத்தைத் தடுக்க வேண்டும். தகவல் கொடுக்காத பட்சத்தில் அந்த அந்த இலாக்காவில் உள்ள அலு வலகங்களிடம் மேல் முறையீடும் செய்யலாம். அங் கும் கிடைக்காத பட்சத்தில் தகவல் உரிமைகள் ஆணையரிடமும் அப்பீல் செய்து ஆவணங்களைப் பெற வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயல் களும் சட்டத்திற்கு உட்பட்டு அமைவதோடு சட்ட மீறுகை செய்யும் அதிகாரிகள், மதக் கலவர அபா யத்தை உண்டு செய்ய எத்தனிக்கும் சங்பரிவார் அமைப்பினருக்கு ஒரு பாடமாகவும் எச்சரிக்கை யாகவும் இருக்க வேண்டும். சட்டத்தைச் சங்கிகள் கையில் எடுப்பது மதக் கலவரம் செய்வதற்காக! நாம் சட்டத்தைக் கையில் எடுப்பது மதக் கலவரம் கூடாது என்பதற்காக!


மேற்கண்ட வேண்டுகோள் தவிர மற்ற எந்தச் செய்திகளானாலும் உடனடியாகக் கழகப் பொறுப் பாளர்கள், தோழர்கள் தலைமைக் கழகத்திற்குத் தொடர்பு கொண்டு தக்க அறிவுரையினைப் பெற்று பணியாற்றுமாறும், எந்த சட்டச் சிக்கல் (கழக சம்மந்த மாக) இருந்தாலும், உடனடியாக உரிய ஆலோசனை களைப் பெற்று மேல் நடவடிக்கைகளை எடுக்குமாறும் கழக சட்டத்துறை சார்பில் அறிவிக்கப்படுகிறது.


- திராவிடர் கழக  சட்டத் துறை


No comments:

Post a Comment