நாடா - காடா காவல்துறை என்ன செய்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 31, 2020

நாடா - காடா காவல்துறை என்ன செய்கிறது

நாடா - காடா காவல்துறை என்ன செய்கிறது?


அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் திரு. வா.ரங்கநாதன், முறையான பயிற்சி பெற்றுப் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் இவரை, தொடர்ந்து பார்ப்பனர்கள் மிரட்டி வருகின்றனர்.


"கருவறையில் தமிழ் நுழைந்தாலும், தமிழன் நுழைந்தாலும், பெண்கள் நுழைந்தாலும் தீட்டாகிவிடும் என பார்ப்பனர்கள் இன்றுவரை தடுத்து வருகிறார்கள். ரத்தம் சிந்தி தமிழர்கள் கட்டிய, அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஜாதி வேறுபாடின்றி  இந்து மதத்தைச் சேர்ந்த அனைவரும் தகுந்த பயிற்சி முடித்து  அர்ச்சகராகலாம் என கோரினால் பார்ப்பனர்கள் ஆத்திரம் அடைகிறார்கள்.


அனைத்து ஜாதியினரும் அரசு அலுவலகங்களில் பணிசெய்வது போன்று ஏன் கோவில்களில் பணி செய்ய முடியாது? பார்ப்பான் பிறப்பால் உயர்ந்தவன், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற ஜாதி இழிவை எப்படி ஏற்க முடியும்? மூடப்பட்ட அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி களை மீண்டும் திறக்க வேண்டும். பயிற்சி முடித்த மாணவர்களை பெரிய கோவில்களிலும் பணியமர்த்த வேண்டும் என முகநூலில், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊட கங்களில் நாங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதை பொறுக்க முடியாத சிலர் போனில் என்னை மிரட்டு கிறார்கள். கடந்த காலத்தில் ஆட்களை வைத்துத் தாக் கினார்கள்.


ஜூலை 24ஆம் தேதி காலையில் 9597187410 என்ற எண்ணிலிருந்து தமிழ்நாடு அந்தணர் சங்கத்தில் இருந்து மாநிலத் தலைவர் பேசுவதாக ஒருவர் பேசினார். பிறகு ஒரு மணி நேரம் கழித்து பிராமணர் சங்கத்தில் இருந்து பேசுவதாக 7548815221 என்ற எண்ணிலிருந்து வேறு ஒருவர் பேசினார். பெயர் சொல்லவில்லை.


நீங்கள் ஆகமக் கோவில்களில் அர்ச்சகராக வரமுடியாது. ஆகமம் இல்லாத கோவில்களில் போகலாம். நீங்கள் என்ன செய்தாலும் நீங்க ஒரு 'மயிரும்' புடுங்க முடியாது. ஒழுங்கா இருந்துக்கோ" என மிரட்டினர்.


நேரடியாக பார்ப்பனர்களோ அல்லது அவர்கள் தூண்டுதலில் மற்றவர்களோ மிரட்டுவதும் தாக்குதலில் ஈடுபடுவதும் இது முதல் முறை அல்ல. திருவண்ணாமலை அர்ச்சகர் பாடசாலையில் நாங்கள் படித்துக்கொண்டிருந்த பொழுது எங்களுக்கு ஆகமம் கற்றுக்கொடுத்த ஆசிரியரைத் தாக்கினார்கள். அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் வைத்து செயல்படுவதற்கு எதிராக என்னிடம் பேரம் பேசினார்கள். ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் தாக்கினார்கள்.


"கவனமாக அர்ச்சனை செய்யுங்கள்" என சொன்ன தற்காக பெண் பக்தரைச் சிதம்பரம் தீட்சிதர் கன்னத்தில் அறைந்தான். தேவாரம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கினார்கள். இன்று அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கைக்காக அர்ச்சக மாணவர்களின் பிரதிநிதியாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் பேசி வருகிறேன். ஆகையால், பார்ப்பனர்களால் எனக்கும் ஏதாவது நடக்கலாம். எனவே, தமிழக மக்களின் கவனத்திற்கும், தமிழக அரசின் கவனத்திற்கும் பார்ப்பனர்களின் மிரட் டலைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பத்திரிக்கை செய்தியை வெளியிடுகிறோம்."


இப்படி வெளிப்படையாகப் பயிற்சி பெற்ற அர்ச்சகர் சங்கத்தின் தலைவர் ரெங்கநாதன் மிரட்டியவர்கள் யார் என்று தொலைப்பேசி எண்களை வெளியிட்ட பிறகும் இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?


பார்ப்பனர்களோ, அவர்களின் கையாட்களோ, புகார் கொடுத்தால் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்கும் காவல்துறை மற்றவர்கள் புகார் கொடுக்கும்போது, ஏனோ தானோ என்று கண்டும் காணாமல் இருப்பதன்மூலம் காவல் துறை மீதான மக்களின் நம்பிக்கை, மரியாதை குறைந்து போகாதா?


கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியார் சிலைமீது காவிச் சாயம் ஊற்றிய பேர்வழி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாங்கள் மீண்டும் மீண்டும் பெரியார் சிலைமீது காவியைப் பூசுவோம் என்று போட் டோவுடன் வாட்ஸ் அஃப் மூலம் சவால் விட்டுள்ளனர்.


இது நாடா - காடா என்பதை அரசும், காவல் துறையும் தான் முடிவு செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment