புதுடில்லி, ஜூலை 22- உச்சநீதி மன்றத்தில் ‘கொலிஜியம்’ என்று அழைக்கப்படுகிற மூத்த நீதி பதிகள் குழு அய்ந்து பேரைக் கொண்டதாகும்.
இந்த குழுதான் உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதி களாக நியமிக்கப்பட வேண்டியவர்களைத் தேர்வு செய்து, நியமனம் செய்வதற் குப் பரிந்துரை செய்யும். இந் தக் குழுவில் இடம் பெற்றி ருந்த தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஆர்.பானுமதி ஓய்வு பெற்றுள்ளார்.
இதையடுத்து அவரது இடத்துக்கு நீதிபதி யு.யு.லலித் கொண்டு வரப்பட்டுள்ளார். இனி மூத்த நீதிபதிகள் குழு தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் என்.வி. ரமணா, அருண் மிஷ்ரா, ஆர். எப்.நாரிமன், யு.யு.லலித் ஆகிய 5 பேரைக் கொண்டிருக்கும்.
நீதிபதி உதய் உமேஷ் லலித் கடந்த 2014ஆம் ஆண்டு, ஆகஸ்டு 13ஆம் தேதி, மூத்த வழக்குரை ஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நிய மிக்கப்பட்டவர் ஆவார்.
No comments:
Post a Comment