கழகத் தலைவர் இரங்கல்!
‘ராஜ்’ தொலைக்காட்சியின் ஒளிப் பதிவாளராகப் பணிபுரிந்து வந்த நண்பர் வேல்முருகன் அவர்கள் கரோனா தொற்று காரணமாக நோய்வாய்ப்பட்டு காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். 41 வயதே நிரம்பிய ஒருவர் இப்படி மறைவுற்றது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் மாளாத் துயரத்திற்கும் உரியது.
ஊடகத் துறையில் வெளியில் சென்று செய்திகள் சேகரிக் கும் மற்றும் பத்திரிகை விநியோகிக்கும் தொண்டாற்றுபவர்கள் உள்பட அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்தாருக்கும், ‘ராஜ்’ தொலைக்காட்சி குடும்பத்திற்கும் நமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
29.6.2020
No comments:
Post a Comment