பல்கலைக் கழகத் துணைவேந்தராக பழங்குடியினத்தவர் நியமனம்
இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு பழங்குடியினத்தவர் பல்கலைக் கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத் தின் துணை வேந்தராக புது டில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பழங்குடிப் பெண் பேராசிரியை நியமிக்கப்பட்டுள் ளார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரவுபதி முர்மூ, கடந்த மே 28 அன்று ஜார்க்கண்டின் தும்காவில் உள்ள சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சோனாஜாரியா மின்ஸை நியமித்தார். ஆளுநர் முர்மு கிழக்கு இந்திய மாநில மான ஜார்க்கண்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருந்து வருகிறார்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் (ஜே.என்.யு.டி.ஏ) தங்களது முன்னாள் தலைவர் மின்ஸின் நியமனம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மின்ஸ் தற்போது ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் அண்ட் சிஸ்டம்ஸ் சயின்ஸின் பேராசிரியராக உள்ளார். கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இரவு ஜே.என்.யூ. வளாகத்தில் இந்துத்துவ குண்டர்களால் நடத்தப் பட்ட தாக்குதலின்போது காயமடைந்த பேராசிரி யர்களில் இவரும் ஒருவர்.
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் மின்ஸ் உயர் படிப்பை முடித்தார். மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் கணி தத்தில் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஜே.என்.யுவி லிருந்து கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர்.
காங்கிரஸ் கூட்டணி-ஜார்க்கண்ட் முதலமைச் சர் ஹேமந்த் சோரன், சோனாஜாரியா மின்ஸை துணை வேந்தராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment