சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை

மதுரை மக்கள் கண்காணிப்பகம் நடத்திய காணொலிக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் கண்டனம்



மதுரை, ஜூன் 30- சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை கண் டித்து மதுரை, மக்கள் கண்காணிப் பகம் நடத்திய காணொலிக் கூட்டத் தில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


மனித உரிமைக்காகப் போராடி வரும் மதுரை, மக்கள் கண்காணிப்பகம் (People's Watch) சாத்தான் குளம் இரட்டைப் படுகொலையைக் கண்டித்து நடத்திய காணொலிக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட் டது. 28.6.2020 அன்று மாலை நடை பெற்ற கண்டனக் கூட்டத்தில் திரா விடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் பங்கேற்று காவல்துறையினர் சிலரது அத்துமீறிய நடவடிக் கைக் குறித்து கண்டனம் தெரிவித்து உரையாற்றினார்.


கண்டனக் காணொலிக் கூட்டத் திற்கு மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன் தலைமையேற்று நடத்தினார். கண் டனக் கூட்டம் இரண்டு அமர்வுகளில் நடைபெற்றது. முற்பகல் நடைபெற்ற கூட்டத்தில மனித உரிமை அமைப் புகள், மக்கள் இயக்கங்களின் பொறுப் பாளர்கள் கலந்து கொண்டு கண்ட னம் தெரிவித்தனர். முற்பகல் அமர் வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிறைவுரை ஆற்றினார்.


மாலையில் நடைபெற்ற அமர்வில் அரசியல் கட்சியின் தலைவர்கள் மற் றும் சமூக அமைப்புகளின் பொறுப் பாளர்கள் பலரும் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர். திரா விட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ஆதி தமிழர் பேரவையின் தலைவர் அதியமான், எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் தா.வெள்ளையன் மற்றும் தடவியல் மருத்துவ நிபுணர் கள் சிலர் கலந்து கொண்டு உரையாற் றினர்.


கொலை செய்யப்பட்ட சாத்தான் குளம் ஜெபராஜ் (தந்தை), பெனிக்ஸ் (மகன்) குடும்பத்தின் சார்பாக ஜெய ராஜ் அவர்களின் மகள் பெர்சிஸ் அகஸ்டின் கலந்து கொண்டு தமது குடும்பத்திற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பினைக் கூறி அதற்கு உரிய நீதி நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


கண்டனக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பாக பொருளாளர் வீ.குமரேசன் உரை ஆற்றியபொழுது குறிப்பிட்டதாவது:


பொது மக்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பிற்காக உள்ள காவல்துறையில் பணியாற்றிய ஆய்வாளர், காவலர் சிலரது அதீத அதிகார நடவடிக்கையால் ஒரு குடும் பத்தைச் சார்ந்த இரண்டு உயிர்களை - இரண்டு வணிகர்களை - தந்தை மகன் இருவரது உயிர்களை பலிகொடுக்க நேர்ந்துள்ளது. கரோனா தொற்று உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டு வரும் தற்போதைய சூழலில், காவல் துறையினைச் சார்ந்த ஒரு சிலரின் அதிகார வரம்பினை மீறிய அடா வடித்தனத்தால் இரண்டு உயிர்களை இழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிய அளவிற்கு என்ன குற்றம் செய்துவிட்டார்கள் அந்த இருவரும்? கடையடைப்பு நேரத்தைத் தாண்டி சிலமணி நேரத்திற்கு கடையைத் திறந்து வைத்ததற்குத் தண்டனை உயிர்பறிப்பா?


இரண்டு உயிர்கள் பலி வாங்கப் பட்டதற்கான நடவடிக்கைகள் துவங்கும் முன்பே நேற்று முன்தினம் எட்டயபுரத்தில் காவல்துறைக் காவலர் ஒருவரின் விசாரணை என்ப தாக நடந்த தாக்குதலில், அவமானம் தாங்காமல் இளைஞர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் - தொடர் உயிரிழப்புச் சம்பவமும் நடந்துள்ளது. இப்படிப்பட்ட இழப்புகள், காவல் துறையினரின் அதீத நடவடிக்கையால் கடந்த காலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன.


இப்படிப்பட்ட உயிர் இழப்புகள் - அதிகார நடவடிக்கைகள் என்பதன் பெயரால் நடைபெற்ற கொலைகள் இத்துடன் நின்றுவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒருசில காவல்துறை அதிகாரிகளின் அத்து மீறிய செயல்களால் ஒட்டு மொத்த காவல்துறைக்கும் கெட்ட பெயர் வரவேண்டுமா? தப்பு செய்த அதி காரிகளின் மீது ஒப்புக்கு நடவடிக்கை எடுக்காமல் உரிய நடவடிக்கையினை காவல்துறை - தமிழக அரசு எடுக்க முன்வருமா? காவல்துறையினரின் செயல்கள், ஒட்டுமொத்தமாக கண்டு கொள்ளப்படாமல் விடும்போக்கு தான் கடந்த காலங்களில் நடைபெற்று வந்துள்ளது. இது மிகவும் கண்ட னத்திற்குரியது என்று குரல் எழுப்பி மட்டும் பிரச்சினையினை முடித்து விடாமல் காவல்துறையினரின் அத்து மீறிய செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.


திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சாத்தான்குளம் சம்பவம் குறித்து விடுத்த கண்டன அறிக்கையில் "காவல்துறை மனித உரிமைகளை மதிக்க வேண்டுமே தவிர காலில் போட்டு மிதிக்கக் கூடாது. காவல் துறையில் பணியாற்றும் ஒரு சிலரின் அதிகாரத் தன்முனைப்பு இப்படி அவர்களை 'சாமியாடச்‘ செய்துள் ளது. காவல்துறையின் கடமை உணர்வு, கரோனா காலத்தில் மிகப் பலர் மக்களைக் காத்திடும் பணியில் ஈடுபட்டு வருகையில் காவல்துறையில் சிலரது செயல் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல ஆகிவிட்டது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து, விசா ரணை செய்து உரிய தண்டனைக்கு ஆளாக்கப்பட வேண்டும் என கண் டித்து அறிக்கை விடுத்துள்ளார்.


அதிகார வரம்பு மீறிய காவல்துறையினரை பணியிட மாறுதல், தற்காலிக பதவி நீக்கம் எனும் கண்துடைப்பு வேலைகளில் மட்டும் அரசு இறங் காமல் உரிய வகையில் கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட அத்து மீறல்கள் தொடர்ந்து நடை பெறுவதால், குற்றம் செய்திடும் காவல் துறையினரை விசாரிக்க குறைந்த பட்சமாக ஒரு நிரந்தர விசா ரணை அமைப்பை அரசே உருவாக் கிட வேண்டும் என்பதுதான் திரா விடர் கழகத்தின் நிலைப்பாடு. பாதிக் கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கும் வரை போராடும் அனைத் துக் களங்களிலும் திராவிடர் கழக மும் இணைந்து நிற்கும்.


இவ்வாறு கழகப் பொருளாளர் தனது கண்டனத்தை  தெரிவித்து உரையாற்றினார்.


No comments:

Post a Comment