ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 29, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:  • சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொல்லப்பட்டதாக வரும் செய்திகள், காவல் துறையின் அத்துமீறலை யும், அரசின் திறமையின்மையும் காட்டுகிறது என தலையங்கச் செய்தி கூறுகிறது.

  • இந்திய-சீன எல்லை பிரச்சினையில், கட்சிகள் நாட்டின் பாது காப்பைக் கருத்தில் கொண்டு, ஒன்றுபட வேண்டும் என முன்னாள் வெளியுறவு அதிகாரியும், அய்க்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான பவன் வர்மா தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:  • அரசு வங்கிகளில் பா.ஜ.க.வின் தலையீடு விரும்பத்தக்கதல்ல. அக்கட்சியின் தமிழ் நாடு இணைய தளத்தில் வங்கிகளில் கடன் பெற இணைய வழியே தங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித் திருப்பது கண்டனத்துக்குரியது என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜி.வி. மணிமாறன் தெரிவித்து உள்ளார்.


 இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:  • பிரதமரின் பி.எம்.கேர்ஸ் நிதியத்திற்கு சீன நிறுவனங்களில் இருந்து நன்கொடை பெற்றுள்ள விவரத்தை காங்கிரஸ் கட்சியின் அபிசேக் சிங்வி வெளியிட்டுள்ளார். ராஜீவ் காந்தி அமைப்பிற்கு சீன நிறுவனங்களில் இருந்து நன்கொடை பெற்றுள்ளதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியதை அடுத்து, காங்கிரஸ் கட்சி பதிலடியாக இதனை வெளியிட்டுள்ளது.

  • சாத்தான் குளம் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பும், இதே காவல்துறை அதிகாரிகள் பலரை அடித்துத் துன்புறுத் திய நிலையில், ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளார் என்ற செய்தி வந்துள்ளது.


 நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • சட்டீஸ்கர் மாநிலத்தின் அரசின் சின்னமாக பசு மாட்டுச் சாணியை வைக்கலாம் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் கூறியதற்கு கடும் எதிர்ப்பைக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


எகனாமிக் டைம்ஸ், மும்பை பதிப்பு:  • ஆர்.எஸ்.எஸ்., மத்திய அரசு மற்றும் பா.ஜ.க. இடையே ஒருங் கிணைப்பு இன்னமும் அதிகமாக இருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இந்திய-சீன எல்லைப் பிரச்சினையில், இந்திய மக்களிடயே மத்திய அரசுக்கு எதிர்ப்பு உரு வாகாத வகையில் செயலாற்றிடவும் அவ்வமைப்புகளில் உள்ளோர்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • இந்திய-சீன எல்லைப் பிரச்சினையை தனக்கு சாதகமாக்கி மத்தியப் பிரதேச இடைத்தேர்தல், பீகார் தேர்தலைச் சந்திக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.

  • முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் நூற்றாண்டு விழாவை தெலுங்கானா முதல்வர் கொண்டாடினார். பிரதமர் மோடி நரசிம்மராவ் குறித்து புகழாரம் செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெரிதாக எந்த விழாவும் நடத்தப்படவில்லை.


- குடந்தை கருணா,


29.6.2020


No comments:

Post a Comment