நீலமலை, மே 19, நீலமலை மாவட்டத்தில் குன்னூர் நகராட்சி பகுதியில் ராஜாஜி பகுதி கரோனா பாதிப்பினால் சிவப்பு எச்சரிக்கை பகுதியாக கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், 2.5.2020 சனிக்கிழமை நமது நீலமலை மாவட்டக் கழகத்தின் சார்பில் மருத்துவர் இரா.கவுதமன் அவர்களின் சொந்த செலவில் ராஜாஜி பகுதி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. அப்பகுதியில் 150 குடும்பத்தினருக்கு 200 கிலோ பொன்னி அரிசியும், 50 கிலோ தேயிலை பொடியும் அப்பகுதி மக்களுக்கு சமமாக வழங்கி உதவினார். இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் அனைத்து தோழர்களும் பங்கு கொண்டு அப்பகுதி மக்களுக்கு உதவிபுரிந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment