இடஒதுக்கீடு உரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 30, 2020

இடஒதுக்கீடு உரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு

புதுடில்லி, மே 30,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் து.ராஜா, உச்சநீதிமன்றம் முன்பாக 29.5.2020 அன்று நாடு முழுமையிலும் மருத்துவக் கல்விக்கு 27 சதவீத இடங்களை இதர பிற்படுத் தப்பட்ட சமூகத்துக்கு ஒதுக்குவதற் கான உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, உச்சநீதிமன்றத்தில் கட்டளை மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.


இந்தக் கட்டளை மனு வாயிலாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உச்சநீதி மன்றத்தின் முன்பு வைத்துள்ள வேண்டுதல் வருமாறு:


அகில இந்திய அளவில் மருத்துவ கல்விக்கான இடங்களை நிரப்புவது சம்பந்தமாக, தேர்வுகளுக்கான தேசிய வாரியம் 9.5.2020 அன்று 'நீட்' பி.ஜி. 2020 முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்களை ஆணையிட்டுத் தருவித்து, அந்த முடிவை ரத்து செய்து உத்திரவிட வேண்டும். தமிழ்நாட்டில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் இளநிலை முதுநிலை மற்றும் பட்டயப் படிப்புகளில், அகில இந்திய கோட்டா முறைக்காக, (மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்கள் தவிர்த்து) மாநில அரசு ஒப்படைத்த (சரண்டர் செய்த) மருத்துவக்கல்வி இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு (BC மற்றும் MBC சேர்ந்து) 50விழுக்காடு ஒதுக்கீட்டை 2020_-2021 கல்வியாண்டில் அமலாக்க உத்தரவிடவேண்டும். மேலும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு தமிழ் நாடு சட்டம் 1994இன் படி ஒதுக்கீடு வழங்குவதை தொடர்ந்து அமலாக்கி வரவும், அதேபோன்று மற்ற மாநிலங் களில் அந்தந்த மாநிலங் களில் உள்ள இடஒதுக்கீட்டு சட்டங்களை அமுலாக் கவும் உத்தரவிட வேண்டும்.


இந்த மனு நிலுவையில் இருக்கும் நேரத்தில்,  இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்காமல், 9.5.2020இல் வெளியிடப்பட்டுள்ள 'நீட்' பிஜி 2020 முடிவுகளின் அடிப்படையில் அகில இந்திய கலந்தாய்வை எந்த வகையிலும் தமிழ்நாட்டில் துவங்கக் கூடாது என எதிர்மனுதாரர் அரசாங்கங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண் டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் உச்ச நீதிமன்றத்தை கோரியிருக்கிறார்.


மேலும் இந்த மனு நிலுவையில் இருக்கும் நேரத்தில்,  இதர பிற்படுத் தப்பட்ட சமூகத்தினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்காமல்,  'நீட்' யுஜி 2020யை நடத்துவதற்கு தமிழ்நாட்டில் எந்தவிதத்திலும் முயற்சி மேற்கொள் ளக் கூடாது  எனவும் எதிர்மனுதாரர் அரசாங்கங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த மனு கோருகிறது.


இந்த வழக்கின் சூழலையும் உண்மைகளையும் கருத்திற்கொண்டு இதற்கு பொருத்தமான யாதொரு உத்தரவையும்  உச்சநீதிமன்றம் வெளி யிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டு கிறோம் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது


இவ்வாறு மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment