அம்மா உணவகங்களில் ஆளுங்கட்சியினர் அராஜகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 30, 2020

அம்மா உணவகங்களில் ஆளுங்கட்சியினர் அராஜகம்

சென்னை, ஏப். 30- அம்மா உணவகத்தில் விநியோகிக்கும் இலவச உணவை வாங்க விடாமல், ஆளுங்கட்சியினர் தடுப்பதாக, புகார் எழுந்துள்ளது.


சென்னை எர்ணாவூர் ஆல் இந்தியா ரேடியோ நகர், ஒத்தவாடை பகுதியில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கூலி தொழிலாளி களான இவர்கள், உணவிற்கு தவியாய் தவிக்கின்றனர்.


வேறு வழியின்றியே அம்மா உணவகத்தில் விநியோகிக்கும், இலவச உணவை வாங்க ஏழைகள் ப¬டெயடுக்கின்றனர்.


ரயில்வே தண்டவாளத்தை கடந்து, எர்ணாவூர் முருகன் கோவில் சந்திப்பில் இருக்கும் அம்மா உணவகத்தில், உணவு வாங்க செல்பவர்களை, அப்பகுதி ஆளுங்கட்சியினர் வாங்க விடுவதில்லை.


காரணம், ஆல் இந்தியா ரேடியோ நகர், ஒத்தவாடை குடிசை பகுதி, மூன்றாவது வார்டை சேர்ந்தவையாகும. எர்ணாவூர், அம்மா உணவகம், நான்காவது வார்டில் உள்ளது.


அதனால், நான்காவது வார்டு மக்களுக்கு கிடைக்காது எனக் கூறி, ஒத்தவாடை பகுதி மக்களை, ஆளுங்கட்சியினர் தவிர்ப்பதோடு, நேதாஜி நகர் உணவகத்திற்கு திருப்பி விடுகின்றனர்.


நேதாஜி நகருக்கு, வெகு தூரம் நடக்க வேண்டும். பாரதியார் நகர், அம்மா உணவகம், சுனாமி குடியிருப்புவாசிகளுக்கே போது மானதாக இருக்கும்.


எர்ணாவூர் அம்மா உணவகத்திற்கு செல்ல, இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆவதால் இங்கு வருகின்றனர்.


சுகாதார பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில், ஓட்டுகளை கணக்கு காட்டி, அம்மா உணவகத்தில், உணவு மறுப்பது, விரக்தியாக ஏற்பட்டுத்தி உள்ளது.


அதிகாரிகள் கவனித்து, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


No comments:

Post a Comment