புத்தாண்டு விழாவில் தமிழர் தலைவர் கருத்துரை
சென்னை, ஜன.1 பிறந்துள்ள 2020 ஆம் ஆண்டில் சவால்களை முறியடிப்போம் என்றும், மக்களைப் பிரிப்பது மதம் - இணைப்பது பெரியார் கொள்கை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை பெரியார் திடலில் நேற்று (31.12.2019) நடைபெற்ற புத்தாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:
(உரையாற்றும்போது புத்தாண்டு பிறந்துவிட்டது).
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். எந்த நிகழ் வாக இருந்தாலும் அதனைப் பிரச்சார யுக்தியாகப் பயன்படுத்திக் கொள்வதுதான் தந்தை பெரியாரின் அணுகுமுறை.
நோக்கம் பிரச்சாரமே!
இந்தப் புத்தாண்டு பிறப்பையும் அந்த வகையில்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
படத் திறப்பாக இருந்தாலும், திருமண விழாவாக இருந்தாலும் அவற்றை அவ்வகையில் பயன்படுத்தி வெற்றி கண்டவர் தந்தை பெரியார்.
2019 இல் பல சோதனைகள் - குறிப்பாக 'நீட்', குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவை. இவற்றை முறியடிக்கும் ஆண்டாக 2020 ஆம் ஆண்டு அமைய சூளுரை எடுத்துக்கொள்வோம்.
மதவெறி, ஜாதி வெறி ஆகியவற்றை முறியடிக்க உறுதி ஏற்போம்!
அகண்ட பாரத தேசமாம்!
அகண்ட பாரதம் என் கிறார்கள். பாகிஸ்தானையும், வங்கத்தையும், மியான்மா வையும் சேர்த்து அமைக்கப் படுவதுதான் அகண்ட பாரதம்.
இப்படிச் சொல்லுவதால் ஏற்படும் பார தூர விளைவு களைக் கவனிக்கத் தவறு கிறார்கள். இந்து நாடு என் கிறார்கள், ராமராஜ்ஜியம் என்கிறார்கள் - இந்தியாவில் உள்ள அனைவருமே இந் துக்கள்தான் என்கிறார்கள்.
பிளவுபடுத்துவது மதம் - இணைப்பது பெரியாரியம்
இதன்மூலம் மக்களைப் பிளவுபடுத்துகிறார்கள். மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை விதைக் கிறார்கள், கலவரத்தைத் தூண்டுகிறார்கள்.
இவற்றையெல்லாம் எதிர்கொள்ளவேண்டிய பொறுப்பு நமக்கெல்லாம் இருக்கிறது.
மிருக பலம் இருக்கிறது என்பதால்...
இவர்களுக்கு மிருக பலம் இருப்பதால் எதையும் செய்யலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.
இந்தப் பலத்தால் இரு சட்டங்களைக் கொண்டு வந்து மக்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்ததுதான் மிச்சம். மிருக பலத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று நினைப்பது ஆபத்து என்பது இப்பொழுது விளங்கிட வில்லையா?
மக்களைப் பிரிப்பது மதம் - மக்களை இணைப்பது, ஒன்று சேர்ப்பது தந்தை பெரியார் கொள்கை - மனிதநேயம்தான் நமது பார்வை.
சுயமரியாதைத்
திருமண நிலையத்தின் சாதனை!
பெரியார் திடலில் இயங்கிவரும் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பாக நாள்தோறும் திருமணங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. 365 நாள்களில் 461 சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
இதில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் 420.
பார்ப்பனர்கள்கூட இங்கே வந்து திருமணம் நடத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில், 2019 ஆம் ஆண்டில் ஒன்பது பார்ப்பனர்களுக்கு -இணையர்களுக்கு சுயமரி யாதைத் திருமணம் நடந்திருக்கிறது.
தனி மனிதர் மீதல்ல -
தத்துவத்தின்மீதுதான் எதிர்ப்பு
எங்களுக்கு எந்தத் தனிப்பட்ட பார்ப்பனர்மீதும் வெறுப்பு இல்லை - தத்துவத்தின் அடிப்படையில்தான் எதிர்ப்பு.
மணவிலக்கு பெற்ற 19 பேருக்கு திருமணம் நடந்திருக்கிறது.
எந்தவித விளம்பரமும் இல்லாமல், அமைதியான முறையில், ஆக்க ரீதியான பணிகளை நாங்கள் செய்து கொண்டே வருகிறோம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறினார்.
No comments:
Post a Comment