கீழ்வேளூரில் சுயமரியாதை இயக்கம் - "குடிஅரசு" நூற்றாண்டு விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 9, 2024

கீழ்வேளூரில் சுயமரியாதை இயக்கம் - "குடிஅரசு" நூற்றாண்டு விழா!

கீழ்வேளூர், மே 9- நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் கீழ்வேளூர் கீழ வீதியில் சுயமரியாதை இயக்கம் – “குடிஅரசு” நூற்றாண்டு தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் 4.5.2024 அன்று மாலை 6.30 மணியளவில் தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது.
கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் பாவா. ஜெயக்குமார் தலைமை உரையாற்றினார். மாவட்ட விவசாய அணி செயலாளர் இரா.இராமலிங்கம், மாவட்டத் துணைச் செயலாளர் ரெ.துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் ந.கமலம், ஒன்றிய விவசாய அணி செயலாளர் ஒக்கூர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கீழ்வேளூர் நகரத் தலைவர் அ.பன்னீர் செல்வம் வரவேற்பு உரையாற்றினார்.

கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக .பொன்முடி, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் ஆகியோர் தொடக்க உரையாற்றினார்.
கழகப் பேச்சாளர்கள் புவனகிரி யாழ் தீலிபன், கோ.செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் கூட்டத்தில் சிறப்புரை யாற்றினர்.
மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன்,நாகை நகரத் தலைவர் தெ.செந்தில்குமார், கீழையூர் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், கீழ்வேளூர் ஒன்றிய துணைத் தலைவர் அரங்கராசு, நாகை நகர செயலாளர் ரவி, மற்றும் ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
கூட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் செரு நல்லூர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.

ஒகேனக்கல்லில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

ஒகேனக்கல், மே 9- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மற்றும் குடிஅரசு இதழ் நூற்றாண்டு தொடக்க விழா பரப்புரை பொதுக்கூட்டம் கடந் 6-5-2024 அன்று மாலை 5 மணிக்கு மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் நா. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் தீ. அன்பரசு வரவேற்புரையாற்றினார். மாவட்ட திராவிடர் கழக தலைவர் கு. சரவணன், பொதுக்குழு உறுப்பினர் க. கதிர், வீ. சிவாஜி, காமலாபுரம் ராஜா, ஆகியோர் முன்னிலையற்றனர்.
இர. கிருஷ்ணமூர்த்தி இணைப்புரை வழங்கினார். கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட மீனவரணி தலைவர் காளியப்பன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா. சரவணன் ஆகியோர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் குடிஅரசு இதழ் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து சிறப்பு உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவரணி அமைப் பாளர் எம். ராமகிருஷ்ணன், மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் முத்தையன், வனக்குழு தலைவர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் கூத்தப்பாடி பாஸ்கர், ஊட்ட மலை கிளை திமுக செயலாளர் ராமமூர்த்தி, ஒகேனக்கல் திமுக கிளை செயலாளர் மோகன், ஜான்பாஷா, மணி, கோவிந்தன், சுந்தரேசன், மஹபூப்பாஷா, மணி, ஆகி யோர் பங்கேற்றனர். நிறைவாக மடம் திமுக பொறுப்பாளர் கணேசன் நன்றி கூறினார்.

கன்னியாகுமரியில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா!


திட்டுவிளை, மே 9- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு ஏடு நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம் குமரிமாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கடந்த 7.5.2024 அன்று மாலை 5.30 மணிக்கு திட்டுவிளை பேருந்து நிலைய சந்திப்பில் திரா விடர் கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக் கவுரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், தோவாளை ஒன்றிய தலைவர் மா.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திராவிடர் கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ் வர வேற்புரையாற்ற பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு, மாவட்ட திக துணைச்செயலாளர் அய்சக் நியூட் டன் கலை இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னு ராசன்; திமுக பேச்சாளர் கோ.சி. சுந்தர் ஆகியோர் கருத் துரையாற்றினர்.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் ஆகி யோர் சுயமரியாதை இயக்க வரலாறு, திராவிடர்கழக வரலாறு, குடிஅரசு ஏட்டின் சிறப்புகள், தந்தை பெரியாருடைய தொண் டுகள், திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுடைய சமூகநீதிப் பரப்புரைகள், செயல்பாடுகள் குறித்து விரிவாக சிறப்புரையாற்றினார்கள்.
நாகர்கோவில் மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி, மாநகர செயலாளர் மு. இராஜசேகர் இளைஞரணி மாவட்டச் செய லாளர் எஸ்.அலெக்சாண்டர், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் , கழகத் தோழர்கள் ப.வேலாயுத பெருமாள், பொன்.பாண்டியன்,சி.காப்பித்துரை, தும்பவிளை மு.பால்மணி, மற்றும் கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். கோட்டாறு பகுதி கழகத் தலைவர் ச.ச. மணிமேகலை நன்றி கூறினார்.

No comments:

Post a Comment