நாம் ‘பத்திரமான’ தேர்தலுக்காகப் போராடுகிறோம்! பி.ஜே.பி., தேர்தலையே ‘பத்திரங்கள்’ மூலம் நடத்தப் பார்க்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

நாம் ‘பத்திரமான’ தேர்தலுக்காகப் போராடுகிறோம்! பி.ஜே.பி., தேர்தலையே ‘பத்திரங்கள்’ மூலம் நடத்தப் பார்க்கிறது!

featured image

தேனி, மதுரை தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி. வீரமணி கருத்துப் பரப்புரை!

தேனி, மதுரை, ஏப்.5- இந்தியா கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பரப்புரைப் பயணத்தின் மூன்றாம் நாளான நேற்று (4.4.2024) மாலை, ஆசிரியர் அவர்கள் தேனி, மதுரை தொகுதிகளில் சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்காக பரப்புரை செய்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டில் தி.மு.க. தலைமையிலான “இந்தியா” கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழர் தலைவர் தலைமையில் பரப்புரை செய்து கொண்டிருக்கின்ற பயணத்தின் மூன்றாம் நாளான நேற்று (4.4.2024) முதல் கூட்டமாக ஆண்டிப்பட்டியில் தேனி வைகை சாலை சந்திப்பில் தி.மு.க. தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து மாலை
6 மணிக்குத் தொடங்கி பரப்புரை நடைபெற்றது.

தேனியில் தமிழர் தலைவர்!
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஸ்டார் நடராஜன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செய லாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
ஆண்டிப்பட்டி பேரூர் செயலாளர் சரவணன், கழகக் காப்பாளர் ரகு நாகநாதன், மாவட்டத் தலைவர் சுருளிராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்புச் சட்டை நடராஜன், பேபி சாந்தா தேவி, டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த் தனன், பெரியகுளம் அன்புராசன், தி.மு.க. ஆண்டிப்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ராஜாராம், தலைமைக்கழக அமைப்பாளர் சிவா, மாவட்ட அமைப்பாளர் கண்ணன், உசிலம்பட்டி மாவட்டத் தலைவர் எரிமலை, மாவட்டச் செயலாளர் முத்துக்கருப்பன் மற்றும் ஆண்டிப்பட்டி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகராசன், காங்கிரஸ் நகரத் தலைவர் சுப்புராஜ், சி.பி.அய். மாவட்ட துணைச் செயலாளர் பரமேஸ்வரன், சி.பி.அய். (எம்) மாவட்டச் செயலாளர் அண்ணாமலை, வி.சி.க. ஒன்றியச் செய லாளர் குழந்தைராஜ், ம.தி.மு.க. தெற்கு ஒன்றியச் செயலாளர் பாண்டிச்செல்வம், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் முல்லை அழகர், வெல்ஃபேர் பார்ட்டி கட்சி ஒருங்கிணைப்பாளர் முகமது சபி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஆசையன், தி.மு.க. மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ஆ.ராமசாமி, வேட்பாளர் தங்க. தமிழ்ச்செல்வன் மகன் நிஷாந்த் தங்க. தமிழ்ச்செல்வன், வி.சி.க. தகவல் தொழில்நுட்பச் செய லாளர் அன்பு வடிவேல் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.

பா.ஜ.க.வின் பாசிசமும்,
மலை போல ஊழல்களும்
நேரத்தின் அருமை கருதி, ஆசிரியர் மேடைக்கு வந்தவுடன் புத்தக அறிமுகம், கூட்டணிக் கட்சித் தோழர்கள் ஆசிரியருக்கு மரியாதை செய்தல், புத்தக விற்பனை ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்றது. முன்னதாக ஆண்டிப்பட்டி தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர் மகராசன் தி.மு.க.வின் சாதனைகளைச் சொல்லி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். இறுதியாக பேசிய ஆசிரியர், “இந்தத் தேர்தலில் மக்கள் கொஞ்சம் ஏமாந் தாலும் இந்தியாவில் நிலவும் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது.” ஆகவே தான் 91 வயதான என்னுடைய உடல் நிலையையும் பொருட்படுத்தாது உங்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். உங்கள் அன்பும், ஆதரவும் என்னை உற்சாகம் கொள்ள வைக் கிறது” என்று தொடங்கினார்.

‘‘ஒருபக்கம் பாசிசம்; இன்னொரு பக்கம் மலை போல் ஊழல்கள்” என்று மோடி ஆட்சியை எளிமையாக புரிய வைத்தார். அத்தோடு பொருத்தமாக, “இப்போது 11 லட்சம் புதிய வாக்காளர்கள்; இளைஞர்கள் ஓட்டு செலுத்த இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று தெரிய வேண்டும்” என்று 2014 முதல் 2024 வரை வேலை வாய்ப்புக்காக என்னென்ன பொய்கள் சொல்லி மோடி, இளைஞர்களை ஏமாற்றினார் என்று பட்டியலிட்டார். அதற்காக பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித வளர்ச்சி நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை குறித்த புள்ளி விவரத்தை உதாரணமாக எடுத்துரைத்து, புதிய வாக் காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.
இறுதியாக சேது சமுத்திரத் திட்டம் பற்றி நினைவூட் டினார். இதுவெல்லாம் மீண்டும் வர வேண்டுமென்றால், தேனியில் நம்மிடம் தங்கும் தமிழ்ச்செல்வன்; தங்க தமிழ்ச்செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து நிறைவு செய்தார்.

மதுரையில் தமிழர் தலைவர்!
மூன்றாம் நாளில் (4.4.2024) இரண்டாம் கூட்டமாக மதுரை தொகுதியில் போட்டியிடக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களை ஆதரித்து தினமணி திரையரங்கம்; டி.எம்.எஸ். சிலை அருகில் இரவு 7 மணிக்குத் தொடங்கி பரப்புரை நடைபெற்றது. ஆசிரியர் ஆண்டிப்பட்டியில் இருந்து 7:45க்குள் புறப்பட்டு மதுரையில் 9 மணிக்கு உற்சாக வரவேற்புடன் மேடையேறினார்.
பெருவாரியாக மக்கள் கூடியிருப்பதைக் கண்டு ஆசிரியர் இன்னும் உற்சாகம் அடைந்தார். இந்நிகழ்வை மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமையேற்று சிறப்பித்தார். மாவட்டச் செயலாளர் சுரேஷ் வரவேற் புரை நல்கினார். தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை வே.செல்வம் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்துக் கொடுத்தார்.

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், மேனாள் அமைச்சருமான பொன். முத்துராமலிங்கம் முன்னிலை ஏற்று உரையாற்றினார். தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் தளபதி, தி.மு.க. பொறுப்பாளர் வேலுச்சாமி, மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா சி.பி.அய். (எம்), மாவட்டச் செயலாளர் கணேசன், சி.பி.அய். (எம்) மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் முனியசாமி, சி.பி.அய். மாவட்டச் செயலாளர் முருகன், வல்லரசு பார்வர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் அம்மா வாசி, திராவிட இயக்க தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் வைரமுத்து, வி.சி.க. மகளிரணி பொறுப்பாளர் மோகனா, தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் ஒச்சு பாலு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சி.பி.அய்.(எம்) தோழர்கள் லெனின், ரமேஷ் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.
திராவிடர் கழகம் சார்பில் மேனாள் மாவட்டச் செய லாளர் அழகர், வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் சித்தார்த்தன், மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் கணேசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா. நேரு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநிலச் செயலாளர் சுப.முருகானந் தம், திராவிடர் கழகக் காப்பாளர் முனியசாமி, பகுத்தறி வாளர் கழக மாநில அமைப்பாளர் மகேந்திரன், தொழி லாளர் பேரவை தலைவர் சிவகுருநாதன், மாவட்டத் துணைத் தலைவர் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்தனர்.

பா.ஜ.க.வை அகற்ற
மக்கள் தயாராகிவிட்டார்கள்!
இறுதியாக ஆசிரியர் பேசினார். அவர் எடுத்த எடுப் பிலேயே, “என்னதான் வடநாட்டு ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பி வந்தாலும், பா,ஜ,க, ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்.” நாட்டில் நடைபெற்ற 19 தேர்தல்களில் இரண்டு தேர்தல்கள் தான் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை. ஒன்று, நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் நடைபெற்றது. அப் போதும் தேர்தல் ஆணையம் இருந்தது. ஆட்சியாளர்கள் அதை வளைக்கவில்லை. ஆனால், இப்போது அறிவிக் காத நெருக்கடி காலம். தேர்தல் ஆணையமும் வளைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. எப்படியிருந் தாலும் நாங்கள் மக்களை நம்புகிறோம்” என்று முடிப்ப தற்குள் மக்கள் ஆர்பரித்து கையொலி எழுப்பி ஆசிரி யரின் நம்பிக்கை உண்மைதான் என்பதை செய்கை மூலம் வெளிப்படுத்தினர். தொடர்ந்த ஆசிரியர், “முற்போக்கு சக்திகளை நம்புகிறோம்” என்று முடித்தார். மேலும் அவர், “ஒன்றியத்தில் இருப்பவர்களால் இந்தியா கூட்டணியை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், இது கொள்கைக் கூட்டணி” என்றதும் அதற்கும் மக்கள் ஆதரவு தெரிவித்து மனப்பூர்வமாக கையொலி செய்தனர்.

திராவிட மாடலைப் பின்பற்றும்
கனடா அரசு!
மேலும் அவர், ’கருப்புப் பணத்தை பறிமுதல் செய்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன்’ என்று சொன்ன மோடியின் உத்திர வாதத்தை நம்பி, எளிய மக்கள் வங்கிக் கணக்கைத் தொடங்கியதையும், சேர்த்து வைத்திருந்த சிறுவாட்டு காசுகளை மக்கள் வங்கியில் போட்டதையும், மினிமம் பேலன்ஸ் இல்லையென்று மக்களின் வங்கிக் கணக்கி லிருந்து ரூ.21,000 கோடிகளை கொடூரமாகப் பறிமுதல் செய்ததையும் தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துச் சொல்வதை சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது என்று ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். வளர்ந்த நாடான கனடா போன்ற நாடுகளே தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ அரசின் திட்டங் களை பின்பற்றுகின்றன என்கிற அரிய தகவல்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து மணிப்பூர் கலவரம், தமிழ்நாடு வெள்ளப்பேரிடரில் தத்தளித்த போது ஒன்றிய அரசு நடந்து கொண்ட விதம், பத்திர ஊழல், சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்டவற்றை எடுத்துச் சொல்லி, “கடந்த அய்ந்தாண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்ட தோழர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு கதிர் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
நிறைவாக மாவட்டத் துணைத் தலைவர் பவுன் ராசா நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment