தேர்தல் நெருங்கும் நேரம் டில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம் மேலும் மேலும் தீவிரம் - திக்குமுக்கு ஆடுகிறது பிஜேபி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 4, 2024

தேர்தல் நெருங்கும் நேரம் டில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம் மேலும் மேலும் தீவிரம் - திக்குமுக்கு ஆடுகிறது பிஜேபி

featured image

சண்டிகார், மார்ச் 4- பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட் டத்தில் ஈடுபட் டுள்ள விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப் படுத்த முடிவு செய்துள்ளனர். அதன் படி நாடு முழுவதும் 10ஆம் தேதி ரயில் மறிய லுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

விவசாயி உயிரிழப்பு

வேளாண் விளைபொருட் களுக்கு சட்டம், வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பஞ்சாப்பில் இருந்து டில்லி நோக்கி கடந்த மாதம் 13ஆம் தேதி விவசாயிகள் பேரணி தொடங்கினர்.

அவர்கள் அரியானா எல்லை யில் தடுத்து நிறுத்தப்பட்டதால், அங் கேயே அமர்ந்து போராடி வருகின்றனர். இதில் கடந்த 21ஆம் தேதி காவல்துறையினருடன் நடந்த மோதலில் சுப்கரன்சிங் என்ற பஞ்சாப் விவசாயி உயிரிழந்தார்.
இந்த விவசாயியின் சொந்த ஊரான பதிண்டா மாவட்டத்தின் பல்லோவில் நேற்று (3.3.2024) நினைவுவேந்தல் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாய அமைப்பு தலை வர்களான சர்வான் சிங் பாந்தர் மற்றும் ஜக்ஜித்சிங் தல்லேவால், விவசாயிகள் போராட் டத்தை தீவிரப்படுத்த இருப்பதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

எங்கள் கோரிக்கைகள் நிறை வேறும் வரை பஞ்சாப்- அரியானா எல்லைப் பகுதிகளான ஷாம்பு, கானா ரியில் நடந்து வரும் போராட்டத்தை அமைதியான முறையில் தொடர முடிவு செய் துள்ளோம். இதில் பங் கேற்க 2 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் திரண்டு வரவும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.
விவசாயிகளின் கோரிக்கை களை வென்றெடுப்பதற்காக டில்லி யில் போராட்டம் நடத்த திட்ட மிட்டு உள்ளோம். இதில் பங்கேற்க பிற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளுக் கும் அழைப்பு விடுத் துள்ளோம்.
டிராக்டர்களில் டில்லிக்கு வர முடியாதவர்கள் ரயில் உள்ளிட்ட பிற போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி 6ஆம் தேதி டில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக் கிறோம்.

4 மணி நேரம் ரயில் மறியல்

இதைப்போல விவசாயிகளின் போராட்டத்தை நாடு முழுவதும் விரி வுபடுத்த திட்டமிட்டு இருக் கிறோம். அதன்படி எங்கள் கோரிக் கைகளுக்கு அரசு செவிசாய்ப்ப தற்கான அழுத் தத்தை கொடுக்கும் வகையில் 10ஆம் தேதி பகல் 12முதல் 4 மணி வரை (4 மணி நேரம்) நாடு முழுவதும் ரயில் மறியல் போராட் டம் நடத்துமாறு விவசாயிகள் மற்றும் வேளாண் தொழி லாளர் களுக்கு அழைப்பு விடுத்துள் ளோம்.
விவசாயிகளுக்கு ஆதரவளிக் கும் வகையில் பஞ்சாப்பில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் தீர்மானம் நிறை வேற்றுவதுடன் போராட்டம் நடை பெறும் ஷாம்பு,கானாரி பகுதிகளுக்கு ஒவ் வொரு கிராமத்திலும் செல்ல வேண்டும்.

ஒன்றிய அரசு விரும்பவில்லை

விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க ஒன்றிய அரசு விரும்பவில்லை. மாறாக தேர்தலில் வெற்றி பெறு வதற்காக பா.ஜனதா பிரித்தாளும் அரசியலை மேற்கொண்டு வருகிறது.
விவசாயிகளின் போராட்டம் பஞ்சாப்பில் மட்டும் நடப்பதாக வும், வெறும் 2 அமைப்புகள் மட்டும் ஒருங்கிணைப்பதாகவும் ஒரு கருத்தை உருவாக்க ஒன்றிய அரசு முயற் சிக்கிறது. ஆனால் இந்த 2 அமைப்புகளின் கீழ் 200-க்கும் மேற்பட்ட கிளைகள் நாடு முழு வதும் உள்ளன என்பதை தெளிவு படுத்த விரும்புகிறோம்.
விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் பிரச்சினை அர சின் செயல் திட்டத்திலேயே இல்லை. ஆனால் எங்கள் போராட் டம் தொட ரும் தேர்தல் நடத்தை விதி கள் அமல் படுத்தப்பட் டதும் எங்கள் போராட்டம் நீர்த் துப் போகும் என்ற கருத்து தவறு.
எங்கள் உரிமைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். எங்கள் கடைசி மூச்சு வரை போராடு வோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம். –
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment