ரோபாட்டிக்ஸ் பயிற்சி பெற்ற முதல் அணி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 2, 2024

ரோபாட்டிக்ஸ் பயிற்சி பெற்ற முதல் அணி மாணவர்களுக்கு சான்றிதழ்கள்

featured image

வல்லம். மார்ச். 2- ரோபோடிக்ஸ் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) உள்விளையாட்டரங்கில் நடை பெற்றது.
இவ்விழாவில் பேரா. சர்மிளா பேகம் (கனிணி மற்றும் அறிவியல் துறை முதன்மையர்)வரவேற்புரை யாற்றும் போது திருச்சி, வெட்டிக் காடு, ஜெயங் கொண்டம் ஆகிய ஊர்களில் பயிலும் பள்ளி மாணவர் களுக்கு ஒரு ஆண்டாக ரோபாட் டிக்ஸ் துறைப்பற்றி பயிற்சி அளிக் கப்பட்டது.
அப்பயிற்சி முடித்த 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான 917 பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ரோபாட்டிக்ஸ் பயிற்சி சான்றிதழ் மாண்பமை மேயர் அவர்களால் வழங்கப்படு கிறது என்றார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் உரை
பெரியார் மணியம்மை அறிவி யல் மற்றும் தொழில்நுட்ப நிறுவ னத்தின் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா வெ. இராமச்சந்திரன் உரையாற்றும் போது, ரோபாட்டிக்ஸ் தொழில் துறையில் நாம் முன்னேறியிருக் கின்றோம். சென்ற மாதம்கூட தேசிய அறிவியல் நாள் கண்காட்சி இங்கு மாணவர்களால் காட்சிப் படுத்தப்பட்டது. அதில் அனைத்து மாணவர்களும் அறிவியல் திறனை வெவ்வேறு வகையில் வெளிப்படுத் தியிருந்தனர்.
ஆகையால் பெற் றோர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகள் எந்தத் துறையில் பயில வேண்டும் என்று விரும்புகிறார்களோ அந்த துறையில் பயில வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாண்பமை மாநகராட்சி மேயர் அவர்கள் உரை
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் அவர்கள் உரையாற்றும் போது இப்பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேரா. நல்.இராமச் சந்திரன் அவர்களை நாம் மாமன்ற உறுப்பினராக இருக்கும் போது பலமுறை சந்தித்து இருக்கின் றோம். மேனாள் துணை வேந்தர் அவர்கள் எப்பொழுதுமே விஞ்ஞானத்தை பற்றி பேசிக் கொண் டிருப்பார்கள்.
அவர்கள் மூலம் தான் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும், உயிர்வாயு உற்பத்தி போன்றவை களை பல்கலைக்கழகத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்து இன்று தமிழ்நாடு எங்கும் அந்த தொழில்நுட்பம் பரவியிருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன் அண்ணா நூற்றாண்டு அரங்கில் சந்திராயன் 3 எப்படி இயங்குகிறது என ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு ஆசிரியர்களால் மாணவர்க ளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இதில் சில மாணவர்களை மட்டும் தேர்வு செய்து இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தோம்.
ரோபாட்டிக்ஸ் படிப்பில் பெரி யளவு முன்னேற்றம் மற்றும் அறிவியலும் வளர்ந்துள்ளது.
ரோபாட்டிக்ஸ் இயந்திரத்தை நாம் பயன்படுத் தினால் அனைத்து வேலைகளையும் அதுவே செய்து விடுகிறது. மருத்துவத் துறையிலும் இன்று ரோபாட்டிக்ஸ் இயங்கி வருகிறது. உலக அளவில் விஞ்ஞானத்தில் இந்தியர்கள் தான் சிறந்து விளங்குகிறார்கள் என்றார்.
பின்னர் அருளானந்தம் நகரில் உள்ள ஸ்டெம்பார்க் என்ற இடத்தை மாணவர்களாகிய நீங் கள் பார்த்து அங்குள்ள தொழில் நுட்பம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண் டார்.
மாண்பமை மேயர் சண்.இராம நாதன், பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா. வெ.இராமச் சந்திரன், பல்கலைக்கழக பதிவா ளர் பேரா. பி.கே.சிறீவித்யா ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு களை வழங்கினார்கள். இறுதியாக ரோபாட்டிக்ஸ் பயிற்சியாளர் திவ்யா நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment