அக்கச்சிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 3, 2024

அக்கச்சிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

 

கந்தர்வகோட்டை மார்ச் 3- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றி யம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் பள்ளிக்கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி 2024-2025ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேர ணியை பள்ளி மேலாண்மை குழுவின் கல்வியாளரும், மருத்துவருமான சுவா மிநாதன் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மய்யம் ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் ரகமதுல்லா பேசும் போது: அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வி பயில ஸ்மார்ட் வகுப்பறைகள் , திருவள்ளுவர் தமிழ் மன்றமும், ஷேக்ஸ்பியர் ஆங்கில மன்றமும், ராமானுஜம் கணித மன்ற மும், ஆல்பிரட் அய்ன்ஸ்டீன் அறிவியல் மன்றம், சுற்றுச்சூழல் மன்றம் உள்ளிட்ட மன்றங்கள் சிறப்பாக செயல் பட்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக் கப்பட்டு வருகிறது.
அறிவியல் ஆய்வகம் மூலம் மாண வர்களுக்கு அறிவியல் மனப்பான்மை வளரக்கூடிய வகையில் அறிவியல் பரி சோதனைகள் மூலம் கற்பிக்கப்படுகிறது. தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வில் எங்கள் பள்ளி களை சேர்ந்த மாணவர்கள் இதுவரை நான்கு பேர் தேர்வு பெற்றுள்ளனர்
சிறப்பான மன்ற செயல்பாடுகள் மூலம் தங்களுடைய திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெறக்கூடிய துளிர் திறனறிவுத் தேர்வு, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல், வினாடி வினா.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அக்கச்சிப்பட்டியில் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டவரும் எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், வானவில் மன்ற செயல்பாடுகள், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பெற்றோர்கள் நித்யா, சூர்யா, சுதா, சூர்யா சுமதி, ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச்சாமி, தற்காலிக ஆசிரியர்கள் கவுரி, தனலட் சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment