தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டதால் க.பொன்முடிக்கு மீண்டும் பதவி சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 13, 2024

தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டதால் க.பொன்முடிக்கு மீண்டும் பதவி சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தகவல்

featured image

திருநெல்வேலி, மார்ச் 13- மேனாள் அமைச்சர் க.பொன்முடி மீதான தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள தால், அவருக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரை வில் அறிவிக்கப்படும் என்று, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (12.3.2024) கூறியதாவது:
வெள்ளைக்காரர்கள்தான் இந்தியக் கலாச்சாரத்தை அழித் தார்கள் என்று, இரு மாதங்களுக்கு முன் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார். அதே போல, பலரும் இதுகுறித்து பேசி வருகிறார்கள்.

பிரிட்டிஷ்காரர்களின் வரு கைக்கு முன்னர் இந்தியக் கலாச் சாரம் எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
அப்போது, உயர் ஜாதியினர் மட்டுமே படிக்கலாம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம், ஆல யங்களுக்கு சென்று வழிபடலாம், சொத்து வாங்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால். கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற வெள்ளைக் காரர்கள் வருகைக்குப் பின்னர் தான் எல்லோரும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் மத போதகர்களாக வந்தாலும், இந்திய, தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள். இலவசமாக கல்வி கொடுத்தார்கள்.

தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி ஒரு வழக்கில் தண்டனை பெற்ற தால், அவர் சட்டப்பேரவை உறுப் பினராக நீடிக்க முடியாது என உத்தர விடப்பட்டது.
அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், அவரது தண்டனைக்கு தடை விதித்துள்ளது. எனவே, அவருக்கு மீண்டும் பதவி வழங்கு வது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும்.

வயநாடு மக்களவை உறுப் பினர் ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல், காசிப்பூர் மக்களவை உறுப்பினர்அன்சாரி ஆகியோ ரது விவகாரத்தில் என்ன மாதிரி யான சட்ட நடவடிக்கை எடுக் கப்பட்டதோ, அதேநடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் எடுக்கப்படும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு, சட்டப் பேரவை முதன்மைச் செயல ருடன் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பான அறிவிப்பு விரை வில் வெளியாகும். இவ்வாறு தமிழக சட்டப்பேரவைத் தலை வர் மு.அப்பாவு தெரிவித்தார்.

No comments:

Post a Comment