அ.தி.மு.க.வின் திடீர் ஞானோதயத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன லாபம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 3, 2024

அ.தி.மு.க.வின் திடீர் ஞானோதயத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன லாபம்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி

செங்கல்பட்டு, மார்ச் 3- செங்கல்பட்டில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையில் இருந்து…
தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பாஜக டெபாசிட் பெற முடியாது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் அவர்கள் மல்லுக்கட்டிப் பார்த்தனர். தப்பித் தவறி அதிமுக ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர். தற்போது பாஜகவை அதிமுக கைகழுவி அனாதையாக விட்டபிறகு பாஜக எதிரிகளின் கூடார மாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகளில் மோடி யின் முகத்தைப் பார்த்தாலே தாய்மார்களின் வயிறு எரிகின்றது. கடும் கோபத்தோடு உள்ளனர். விலைவாசியை குறைத்து விட்டேன், எனக்கு ஓட்டு போடுங்கள் என மோடியால் கேட்க முடியுமா? இளைஞர்களிடம் வேலையின்மையை போக்கி விட்டேன் எனக் கூறி ஓட்டு கேட்க முடியுமா?. சிறு,குறு உற்பத்தி யாளர்கள், விவசாயிகளிடம் ஓட்டு கேட்க முடியுமா. முடியாது? எனவே தான், ராமரை வைத்து ஓட்டு சேகரிக்கும் முகவராக மோடி மாறியுள்ளார். டிசம்பர் மாதம் பெரு மழை வந்தது. செங்கல்பட்டு, சென்னை மாவட்டத்தில் மிகப் பெரும் வெள்ளம், ராஜ்நாத் சிங் வந்து பார்வை யிட்டார். ஒன்றிய அரசு குழு வந்து பார்வையிட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு மட்டும் நிவாரணம் கொடுத்தது. இது முடிவதற்குள் தூத் துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளம் வந்தது. அங்கு நிர்மலா சீதாராமன் வந்து பார்வையிட்டார். அங்கேயும் நிபுணர் குழு வந்து பார்வையிட்டது. வெள்ள பாதிப்பு ஏற்பட்டு தற்போது இரண்டு மாதங்கள் முடிந்து விட்டன.
இதுவரையிலும் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாயாவது நிவார ணம் வழங்கியதா?
பாஜக கூட்டணி சிதறிக் கிடக் கின்றது. அதிமுக, பாமக, தேமுதிக தற் போது உங்கள் கூட்டணியில் இல்லை. அண்ணாமலை ஜி.கே.வாசனை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முயற்சிக்கிறார். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 40 தொகுதி களிலும் மகத்தான வெற்றி பெறும். இந்த 40 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும். அதிமுவுக்கு ஞானோதயம் ஏற்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்னால் இது ஏற்பட்டிருந்தால் நாடு பல இழப்புகளை சந்தித்திருக்காது. குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை அன்று அதிமுக எதிர்த்திருந்தால் அச் சட்டம் வந்திருக்காது. சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி யிருக் காது. விவசாயிகளை பாதிக்கிற மூன்று சட்டங்களை அன்று அதிமுக எதிர்த் திருந்தால் அந்தச் சட்டம் வந்திருக்காது.இதை நாடு மறந்து விடுமா?
பாஜக எப்படியாவது மோடியைக் காட்டி ஓட்டு கேட்டு விடலாம் என நினைக்கிறது. தமிழ்நாட்டில் பேசிய மோடி தமிழ் மீது எனக்கு அக்கறை இருக்கிறது. தமிழ் பேசவில்லையே என வேதனை படுகிறேன் என்று பேசினார். அவ்வளவு வேதனைப் படும் மோடி மத்தியில் தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஆட்சி மொழியாக கொண்டுவருவதற்கு சட்டத்தை இயற்றுவதற்கு தயாராக உள்ளீர்களா. ஹிந்தித் திணிப்பு உட்பட மக்கள் மத்தியில் வெறுப்பு அரசியலை விதைக்கும் பாஜகவை ஒரு போதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

No comments:

Post a Comment