உண்மையை உணர்த்தும் ஈரோட்டுக் கண்ணாடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 4, 2024

உண்மையை உணர்த்தும் ஈரோட்டுக் கண்ணாடி

நாட்டில் திரையிட்டு நடத்தப்படும் சட்ட விரோத அரசு செயலை தோலுரித்துத் தெளிவாகக் காட்டக் கூடியத் தன்மையைப் பெற்றது ஈரோட் டுக் கண்ணாடி என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டான ஒரு செய்தி இது.

தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கைகள் அரசுக்கு, சமூகத்துக்கு, கட்சிகளுக்கு, நீதித் துறைக்கு கைகாட்டியாக, வழிகாட்டியாக இருந்து வருவது கண்கூடு. ஆசிரியர் அவர்கள் 31.10.2023 இல் வெளியிட்ட அறிக்கையை தற்போது மீண் டும், சமீபத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையொட்டி ‘விடுதலை’யில் படித்துப் பார்த்தபோது – என்னே தூரப் பார்வை(Fore – Sighted vision) என்று வியந்து போனேன்.

ஆசிரியர் அவர்கள் 15.2.2024 அன்று ‘விடு தலை’யில் “தேர்தல் முறையின் தூய்மைக்கு இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒரு சிறப்பான தீர்ப்பாகும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்தையே ஆங்கில ‘தி இந்து’ 16.2.2024 தேதி இதழ் தலை யங்கத்தில் காண முடிந்தது. Preserve the Purity of Election Greatmen think alike சான்றோர்கள் ஒரே அலை வரி சையில் சிந்திப்பார்கள் என்ப தல்லவா. அதே தலையங்கத்தில், உச்சநீதிமன்றம் – அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடை பெறுவதில் உள்ள இரகசியம் ஒன்றைச் சுட்டிக் காட்டியுள்ளது. “பணம் படைத்த பெரிய கார்ப் பரேட் நிறுவனங்கள், ஆளும் கட்சிக்கு நன் கொடை வழங்கி கைமாறாக சலுகைகளை பெறு கின்றன” இந்த தீர்ப்பு பெரும் நன்கொடை என்ற துணியால் மறைத்ததை அகற்றும் வகையில் உள்ளது (Removing the Veil on Corporate doners who may have been funding ruling parties in exchange for favours).

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கொப்ப ஒன்றிய அரசின் செங்கோல் ஆட்சியின் செயல்பாடு உள்ளதை காண முடிகிறது. இத்தகைய கீழான செயலை, “நமது நாட்டில் யோக்கியமான பிழைப்புகள் மறைந்து விட்டதினால், அனேகருக்கு அரசியல் வயிற்றுப் பிழைப்பாய் போய் விட்டது. அதிலும் தேசத்தை காட்டிக் கொடுத்து பிழைக்க வேண்டிய நிலையில் அரசியல் பதவி அமைக்கப்பட்டு விட்டது” என்று தந்தை பெரியார் 26.2.1928இல் குடிஅரசில் எழுதியதை தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் கண்கூடாகக் காண முடிகிறது.

– மு.வி. சோமசுந்தரம்
கோவை

No comments:

Post a Comment