பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 19, 2024

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர வழக்கு

featured image

புதுடில்லி,மார்ச்19- பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச் சருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், பொன்முடிக் கான தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளதாகவும், அவர் விடுவிக் கப்படவில்லை என்ப தால் அமைச்சராக பத விப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என் றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப் பினர் வில்சன், “ஆளுநர் ஆர்.என்.ரவி அரசமைப் புச் சட்டத்துக்குச் சிறி தும் மரியாதை அளிக்கா மல், மீண்டும் மீண்டும் தவறிழைப்பவராக இருந்து வருகிறார்.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்தான், க.பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிர மாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், “தமிழ் நாடு மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ரவி முயற்சிக் கிறார். அரசியல் சாசனத் தில் 164(1) பிரிவை ஆளு நர் ரவி அப்பட்டமாக மீறு கிறார்.

முதலமைச்சர் பரிந்து ரைந்த பின்பும் க.பொன் முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்து வருகிறார்.
ஆளுநரின் இந்த நட வடிக்கை தவறானது. சட்டத்துக்கு புறம்பா னது. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பொன் முடிக்கு எம்எல்ஏ பதவி மீண்டும் வழங்கப்பட்டுள் ளது.
அவருக்கு அமைச்ச ரவை பதவி வழங்க அரசு பரிந்துரைத்தும் ஆளுநர் அதை செயல்படுத்த மறுக்கிறார்” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
இதனை அவசர வழக் காக விசாரிக்க வேண் டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதி பதி அமர்வு, அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment