குஜராத் : ஆசிரியர் நியமனத்தில் மிகப்பெரும் ஊழல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 12, 2024

குஜராத் : ஆசிரியர் நியமனத்தில் மிகப்பெரும் ஊழல்

அகமதாபாத், மார்ச் 12 பாஜக ஆளும் குஜராத் மாநில ஆசிரியர் பணி நியமனத்தில் பிரமாண்ட ஊழல் அரங்கேறியுள்ளதாக அம் மாநில ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யுவராஜ்சிங் ஜடேஜா ஒலிப்பதிவு மூலம் ஆதாரத்துடன் போட்டு டைத்துள்ளார்.

தாஹோத் மாவட்டத்தின் சஞ்சேலி பகுதி யில் சத்குரு சேவா டிரஸ்ட் ரனுஜாதம் அமைப்பிற்கு சொந்தமாக விடுதியுடன் அரசு மானியத்து டன் இயங்கும் பள்ளி ஒன்று உள்ளது. இது பள்ளியா? இல்லை ஆசிரமமா? என்ற சந் தேகம் ஒருபக்கம் உள்ள நிலையில், சத்குரு சேவா டிரஸ்ட் பள்ளி சமூக அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அறிவிப்பின்படி சுமார் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட் டது. இந்நிலையில், சத்குரு சேவா டிரஸ்ட்டின் ஆசிரியர் நியமனம் வெளிப்படைத் தன்மை இன்றி மறைமுகமாக நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் போராட்டம் நடைபெற்ற நிலை யில், இதனை பாஜகவிற்கு ஆதர வான “கோடி மீடியா” ஊடகங்கள் வெளியிடாமல் மூடி மறைத்தன.
இந்நிலையில், தற்போது ஆம் ஆத்மி கட்சியின் யுவராஜ் சிங் ஜடேஜா 8.3.2024 அன்று ஆடியோ ஒலிப்பதிவு ஆதாரத்துடன் அம் பலப்படுத்தியுள்ளார். ஆடியோ தகவலின்படி சத்குரு சேவா டிரஸ்ட் நடத்திய ஆசிரியர் பணி நியமனத்தில் சுமார் 45க்கும் மேற்பட்டோரிடம் லஞ்சம் வாங்கி பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்றும், தகுதி உள்ளிட்ட பல் வேறு பிரச்சினைகளை கூறியும், மிரட்டியும் 45க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிடம் தலா ரூ.35 லட்சம் வரை கரந்து கோடிக் கணக்கில் பிரமாண்ட ஊழல் அரங் கேற்றப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சஞ்சேலி தாசில்தாரரிடம் யுவ ராஜ் சிங் ஜடேஜா புகார் அளித் துள்ளார்.

No comments:

Post a Comment