இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் திருப்பூர் கே.சுப்பராயன், நாகை வை.செல்வராஜ் இரா.முத்தரசன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 19, 2024

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் திருப்பூர் கே.சுப்பராயன், நாகை வை.செல்வராஜ் இரா.முத்தரசன் அறிவிப்பு

featured image

சென்னை,மார்ச் 19- திமுக கூட் டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் தொகுதியில் கே.சுப்புராயனும், நாகப்பட்டினம் தனித் தொகுதியில் வை.செல்வ ராஜும் போட்டியிடவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவித்தார்.
இதன்பின் செய்தியாளர்களி டம் பேசிய முத்தரசன், “பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு வரும்போது பொய் பேசுகிறார். சென்னை, தென் மாவட்ட மக்கள் வெள்ளத்தில் மிதந்தபோது பிரதமர் மோடி வரவில்லை.
மேலும், இன்று வரை நிவா ரண நிதி ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. ஆனால், பொதுக் கூட்டங்களில் இயற்கை சீற்றங் களால் பாதிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசு நிதி அளிக்க வில்லை என்று பொய் கூறு கிறார்.

மொழியைப் பற்றி பிரமாத மாக பேசுகிறார். ஆனால், தமிழ் மொழிக்கு அளிக்கப்படும் நிதி என்பது மிகக்குறைவு. தமிழ்நாடு மக்கள் இதற்கெல்லாம் ஏமாற மாட்டார்கள். தேர்தல் முடிவில் அது தெரியும். தேர்தல் ஆணை யம் தேர்தல் தேதியை தீர்மானிக் கவில்லை, பிரதமர் மோடியே தீர்மானிக்கிறார்.

மோடி உத்தரவுப்படி தேர் தல் ஆணையம் செயல்படுகிறது. அமலாக்கத் துறை போன்ற வற்றை கொண்டு எதிர்க் கட்சி களுக்கு நெருக்கடி கொடுக்கி றார்.
பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவதால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று தெரிவித்தார்.

வை.செல்வராஜ்: திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப் பினராக, பின்னர் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டார்.
அப்போது விவசாயிகளின் பிரச்சினையில் தீவிர கவனம் மேற்கொண்டார். வெண்ணாறு பிரிவிலிருந்து பொன்னிரை வரை சுமார் 50 கீ.மீட்டர் அனைத்து அரசியல் கட்சியினர், வெகுமக்கள் என 25 ஆயிரம் பேரை ஒரே நாளில் திரட்டி சிரமதான பணி யில் ஈடுபடுத்தி தூர்வாரும் பணியை மேற்கொண்டார். அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
டில்லியில் நடைபெற்ற பஞ்யத்து ராஜ் மாநாட்டில் குடியரசு தலைவர், பிரதமர் முன்னிலை யில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகார பகிர்வு சம்பந்தமாக பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட துணை செயலா ளராகவும் செயல்பட்டவர். தற் போது இரண்டாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாள ராக செயல்பட்டு வருகிறார். தற்போது நாகை நாடா ளுமன்ற தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கே.சுப்பராயன்: நடைபெற வுள்ள 2024 மக்களவைத் தேர்த லில் திருப்பூர் தொகுதியில் திமுக தலைமையிலான “இண்டியா” கூட் டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வேட்பாள ராக கே.சுப்பராயன் போட்டியிடுகிறார்.

1985ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை, மற்றும் 1996 முதல் 2001 வரை ஒன்று பட்டு திருப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். 2004 முதல் 2009 வரை கோவை தொகுதி நாடாளு மன்ற உறுப்பினராக செயல்பட்ட வர். தற்போது 2019 முதல் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

No comments:

Post a Comment