பொன்முடியின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 19, 2024

பொன்முடியின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

5. Therefore, in the facts of the case and in view of the law laid down by this Court in the case of Afjal Ansari v. State of Uttar Pradesh 1, a case is made out for grant of suspension of sentence and conviction. The reason is that in view of operation of Section 8(3) of the 1951 Act, irreversible situation will be created if the conviction is not suspended.
6. Accordingly, we direct that the conviction of the appellant (K.Ponmudi @ Deivasigamani) under the impugned judgment and order stands suspended. Therefore, it follows that even the sentence stands suspended.
7. The prayer for interim relief is accordingly disposed of.

இதன் தமிழாக்கம் வருமாறு:
5. வழக்கின் உண்மை விவரங்களின் அடிப் படையிலும், அப்ஜல் அன்சாரி எதிர் உத்தரப்பிரதேச மாநிலம் வழக்கில் உறுதிப்படுத்தப்பட்ட சட்ட விளக்கத்தின் அடிப்படையிலும், தண்டனையினையும், குற்றத் தீர்ப்பினையும் நிறுத்தி வைத்திட, மேல்முறையீடு வழக்கு வந்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8(3)-ன்படி குற்றத் தீர்ப்பினை (சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது) நிறுத்தி வைக்காவிடில் ஒரு சரி செய்ய முடியாத சூழல் ஏற்படும் என்ற காரணத்தினாலேயே மேல்முறையீடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. மேற்குறிப்பிட்டதிற்கிணங்க, குறிப்பிடப்பட்ட நீதிமன்றம் மேல்முறையீட்டாளருக்கு (க.பொன்முடி என்ற தெய்வசிகாமணி) வழங்கிய குற்றத் தீர்ப்பும், ஆணையும் நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே, இதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தண்டனையும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
7. மேல்முறையீட்டில் வேண்டப்பட்ட இடைக்கால நிவாரண உத்தரவு அளிக்கப்பட்டு முடித்து வைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment