பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 3, 2024

பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி

  தமிழ்நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை இயக்குநர் உத்தரவு 

சென்னை, மார்ச் 3 பெங்களூரு குண்டுவெடிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்கள்,தங்கும் விடுதி களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோத னையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருநாடகா மாநிலம் பெங் களூரு ஒய்ட்பீல்டு பகுதியில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’வில் 1.3.2024 அன்று பிற்பகல் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பெங்களூரு காவல்துறையினர் மற்றும் என்அய்ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தலைநகர் டில்லி யிலும் காவல்துறையினர் எச்ச ரிக்கைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டிலும் காவல்துறையினர் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என உளவுத் துறை எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி, காவல் கண் காணிப்பை தீவிரப்படுத்த தமிழ் நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், சந்தேகப்பட்டியலில் உள்ள நபர்களின் நடமாட்டங்களையும் தமிழ்நாடு காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சென்னையில் முக்கியமான இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட் டல்கள் மற்றும் தங்கும் விடுதி களில் தங்கியிருப்பவர்களின் விவ ரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும், நாடாளுமன்றத் தேர் தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வரும்நிலையில் பாது காப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேலும் தீவிரப்படுத்தி யுள்ளனர்.

No comments:

Post a Comment