டில்லி விவசாயிகளுக்கு ஆதரவு: சென்னை எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 11, 2024

டில்லி விவசாயிகளுக்கு ஆதரவு: சென்னை எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

featured image

சென்னை, மார்ச் 11- குறைந்த பட்ச ஆதார விலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

வேளாண் விலை பொருட் களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், எம்.எஸ்.சுவா மிநாதன் குழு பரிந்துரை நிறை வேற்ற முன்வர வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும், வேளாண்மைக் கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்கு முறை சட்டத்தை திரும்பபெற வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக் கைகள் வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் விவசாயிகள் போராட் டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை தீவி ரப்படுத்த திட்டமிட்டு உள்ள அவர்கள், இதற்காக 10ஆம் தேதி (நேற்று) நாடுமுழுவதும் ரயில் மறியலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி நாடு முழுவதும் நேற்று (10.3.2024) ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு முழுவது மும் விவசாய சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
சென்னை எழும்பூரில் தமிழ் நாடு அனைத்து விவசாய சங்கங் களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண் டியன் தலைமையில் ரயில் மறியல் போராட் டம் நடந்தது.
திருச்சியில் விவசாயிகள் நேற்று மதியம் கோட்டை ரயில் நிலையம் தண்டவாளத்தி லேயே மாரிஸ் தியேட்டர் பாலம் வரை 1 கிலோமீட்டர் தூரம் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப் பியவாறு நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட் டனர்.
இதையடுத்து போராட் டத்தில் ஈடுபட்ட 100 பேரை காவல் துறையினர் கைது செய் தனர்.

No comments:

Post a Comment