அரசின் திட்டங்கள் மக்களை சென்று அடைகிறதா? "நீங்கள் நலமா" திட்டம் மார்ச் 6இல் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 5, 2024

அரசின் திட்டங்கள் மக்களை சென்று அடைகிறதா? "நீங்கள் நலமா" திட்டம் மார்ச் 6இல் தொடக்கம்

featured image

அரசின் திட்டங்கள் மக்களை சென்று அடைகிறதா?
“நீங்கள் நலமா” திட்டம் மார்ச் 6இல் தொடக்கம்
மயிலாடுதுறையில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மயிலாடுதுறை, மார்ச். 5- அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்ற டைவதை உறுதிசெய்யும் வகையில் ‘நீங்கள் நலமா?’ என்ற திட்டம் (மார்ச் 6) தொடங்கப்பட உள்ள தாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலு வலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்துவைத்தார்.
இந்த விழாவில் அவர் பேசிய தாவது:
உள்கட்டமைப்பு வசதிகள்: புதிய மாவட்டங்களை அறிவிப்பது பெரிது அல்ல. அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்து தருவதுதான் பெரிது‌. பல்வேறு புதிய மாவட் டங்களின் உள்கட்டமைப்பு வசதி கள் தி.மு.க. ஆட்சியில்தான் உரு வாக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்ற டைகின்றனவா என்பதை உறுதி செய்யும் வகையில் ’நீங்கள் நலமா?’ என்றபுதிய திட்டம் மார்ச் 6-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
தொலைபேசி மூலமாக.. இதில், மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர் கள், தலைமைச் செயலர்,அனைத்து துறைச் செயலாளர்கள், மக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துகளைக் கேட்டறி வார்கள். நானும் மக்களைத் தொடர்புகொண்டு பேசுவேன். இதன் அடிப்படையில் திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும்.
நிதி நெருக்கடி இருந்தாலும் எந்த நலத்திட்டமும் நிறுத்தப்பட வில்லை. தேர்தல் சமயத்தில் வந்து போகிறவர்கள் நாங்கள் அல்ல. தேர்தல் வர உள்ளதால், பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடுவரத் தொடங்கியுள்ளார்.
வரவேண்டாம் என்று சொல்ல வில்லை. தமிழ்நாட்டிற்கு நன்மை செய்துவிட்டு, நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு பிரதமர் வரட்டும். ஆனால், தமிழ்நாடு மக்களின் வரிப் பண மும், வாக்குகளும் மட்டும் போதும் என்று அவர் நினைக்கிறார்.
தமிழ்நாடு மக்கள் ஏமாறமாட் டார்கள்: தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மோடியைபார்த்து ஏமாறமாட்டார்கள். தமிழ்நாட் டின் உரிமைக்காகவும், வளர்ச்சிக் காகவும் பாடுபடும் திராவிட மாடல் அரசுக்குத்தான் மக்கள் உறுதுணையாக நிற்பார்கள். இவ் வாறு முதலமைச்சர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அர சுத் துறை செயலர்கள் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment