ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பாராமுகம் காரைக்கால், புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 22 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 11, 2024

ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பாராமுகம் காரைக்கால், புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 22 பேர் கைது

காரைக்கால், மார்ச் 11- காரைக்காலில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழ்நாடு மீனவர் கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை (10.3.2024) கைது செய்தனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த சுதன் என் பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக் கால்மேடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கந் தசாமி(43), கிளிஞ்சல்மேடு பி.சுந்தர மூர்த்தி(44) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்களுடன் தமிழ்நாட்டு பகுதி யான நாகை, மயிலாடுதுறை மாவட்டங் களைச் சேர்ந்த கூழையார் எஸ்.காளி தாஸ்(34), ஏ.சிறீராம்(24), தரங்கம்பாடி பி.ஆனந்தபால்(50), பெருமாள்பேட்டை ஆர்.புலவேந்திரன்(42), கே.கவியரசன்(34), ஏ.சிங்காரம்(33), புதுப்பேட்டை ஆர்.மதன் (25), ஆர்.அன்புராஜ்(39), ஆர்.ராஜ்குமார் (23), புதுப்பேட்டை வி.கிஷோர்(29), பொன்னாந்திட்டு எஸ்.நவீன்(22), செருதூர் சி.நவீன்குமார்(18), நாகப்பட்டி னம் எஸ்.செந்தில்(35) ஆகிய 15 பேர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 6-ஆம் தேதி அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அதிகாலையில் நெடுந்தீவு அருகே இந்திய கடல் எல்லைக் குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 15 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர். இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல், புதுக்கோட்டை மாவட் டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து 2 விசைப் படகுகளில் 7 பேர் கடலுக்குச் சென்று நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண் டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற் படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி விசைப் படகுகளை பறி முதல் செய்து அதிலிருந்த 7 மீனவர்களையும கைது செய்தனர்.

No comments:

Post a Comment