தேர்தல் பத்திர வழக்கு : அனைத்து தகவல்களையும் மார்ச் 21-இல் வெளியிட வேண்டும் : ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 19, 2024

தேர்தல் பத்திர வழக்கு : அனைத்து தகவல்களையும் மார்ச் 21-இல் வெளியிட வேண்டும் : ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி,மார்ச் 19- தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு நேற்று (18.3.2024) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப் போது அரசியல் சாசன அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடாத பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஅய்) அணுகுமுறை ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதுடன் கண்டனத்துக்குரியது. மேலும், இந்த விவகாரத்தில் எஸ்பிஅய் வங்கியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை.

எனவே, வரும் 21.3.2024 அன்று மாலை 5 மணிக்குள் மறைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் அதிலும் குறிப்பாக, தேர்தல் பத்திரம் வாங் கப்பட்ட தேதி, வாங்கியவர் பெயர், ஒவ் வொரு பத்திரத்திலும் உள்ள அடையாள எண் உள்ளிட்ட அனைத்து தரவுகளை யும் மார்ச் 21ஆ-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். தேர்தல்ஆணையம் அதனை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து தரவுகளையும் வெளியிட்ட பின் எந்த தகவலும் விடுபட வில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்பிஅய் வங்கியின் தலைவர் மார்ச் 21ஆ-ம் தேதி மாலை 5 மணிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர் பான அனைத்து தகவல்களும் எந்தவித சார்பும் இன்றி பொது வெளியில் பகிரப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இவ்வாறு அரசியல் சாசன அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற விசாரணையின் போது மூத்த வழக்குரைஞர் முகுல் ரோஹத்கி மற்றும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா ஆகியோரின் வாதங்களை கேட்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. பலனடைந்த அரசியல் கட்சிகளு டன் நன்கொடையாளர்களின் அடையாள மும் வெளிப்படும் என்பதால் தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக எண்களை வெளியிடக்கூடாது என வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பான பிக்கி மற்றும் அசோசெம் தாக்கல் செய்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. உருக்காலை அதிபர் லட்சுமி மிட் டல் முதல் சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல், அனில் அகர்வாலின் வேதாந்தா, அய்டிசி, மஹிந்திரா, இதுவரை அதிகம் பேசப்படாத லாட்டரிமன்னன் மார்ட் டினின் பியூச்சர் கேமிங் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக் கான ரூபாயை வழங்கியது. புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்தது.

No comments:

Post a Comment