வடக்குத்தில் ‘உலகத்தாய் மொழி நாள்' விழா வா.மு.சேதுராமனின் பரப்புரைப் பயண வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 23, 2024

வடக்குத்தில் ‘உலகத்தாய் மொழி நாள்' விழா வா.மு.சேதுராமனின் பரப்புரைப் பயண வரவேற்பு

featured image

வடக்குத்து, பிப். 23- கடலூர் மாவட்டம் குறிஞ்சிப் பாடி ஒன்றியம் வடக் குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் திராவிடர் கழகம் சார்பில் 21.2.2024 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை உலகத் தாய்மொழி நாள் மற்றும் பெருங்கவிக்கோ வா.மு.சே. 89 ஆவது பிறந்தநாள் விழா எங்கும் எதிலும் தமிழுக்கு முதன்மை வேண்டி பரப் புரை பயண வரவேற்பு நிகழ்ச்சி சே. சுப்பையா தலைமையில் மாவட்ட கழகத் தலைவர் தண்ட பாணி, கழகப் பொதுக் குழு உறுப்பினர் தாமோ தரன், மாவட்ட அமைப் பாளர் மணிவேல் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது. கிளைக் கழக தலைவர் தங்க பாஸ் கர் வரவேற்புரை ஆற்றி னார். வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவ ணன் நிகழ்வை ஒருங்கி ணைத்தார். கவிஞர் தீபக், கவிஞர் தேன் தமிழன் ஆகியோர் கவிதை பாடினர். பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல் இயக்கப் பாடல்கள் பாடினார்.

பகுத்தறிவாளர் கழக மண்டல அமைப்பாளர் இரா பெரியார் செல்வம். மாவட்ட தலைவர் அரு ணாசலம். மாநில இளை ஞரணி துணைச் செயலா ளர் வேலு. மகளிர் அணி தோழர்கள் கலைச் செல்வி, திராவிட மணி, சுமலதா, புவனேஸ்வரி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமநாதன், திராவிடன் ஊர்தி பயண குழு சந்திர சேகரன், ராசா, மறுவாய் திருநாவுக்கரசு, வடலூர் நகர அமைப்பாளர் முரு கன், ஆசிரியர் செல்வ ராஜ், தாய் ஜெகதீஸ்வரன் ஆகியோர் நிகழ்வில் பங் கேற்றனர்.
கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை சந்திரசேகரன் பாராட் டுரை வழங்கினார். பெரும் கவிக்கோ வா .மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார். முத்தமிழறி ஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மாட்சி பற்றியும் திராவிட மாடல் ஆட்சி நடத்தி தமிழர் பெரு மையை உலக அளவில் கொண்டு சேர்க்கும் தள பதி ஸ்டாலினின் சாத னைகள் குறித்தும் அவர் உரையில் குறிப்பிட்டார். முடிவில் நூலகர் கண் ணன் நன்றி கூறினார். இது விடுதலை வாசகர் வட்டத்தின் 88 ஆவது நிகழ்ச்சி என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment