பஞ்சாப்பில் பா.ஜ.க.விற்கு வலுக்கும் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 19, 2024

பஞ்சாப்பில் பா.ஜ.க.விற்கு வலுக்கும் எதிர்ப்பு

சண்டிகர்,பிப்.19- பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய பிராந்திய கட்சியும், பாஜகவின் நெருங் கிய கூட்டாளியுமான சுக்பிர்சிங் பாதலின் சிரோமணி அகாலி தளம், பாஜக ஆதரவுடன் 1997 மற் றும் 2012-இல் இரண்டு முறை பஞ்சாபில் ஆட்சி அமைத்தது. மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணியிலும் அங்கம் வகித்த வந்த சிரோமணி அகாலிதளத் திற்கு ஒன்றிய அமைச்சர் (ஹர் சிம்ரத் கவுர் – உணவுத் துறை) பதவி வழங்கியது பாஜக. ஆனால் 2020இல் மூன்று வேளாண் சட்டங் களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரங்கேறிய விவ சாய போராட்டம் காரணமாக, இனி பாஜக கூட் டணியில் இருந்தால் பஞ்சாப்பில் மரியாதையை கிடைக்காது என்று கருதிய சிரோமணி அகாலி தளம், ஒன்றிய அமைச்சர் பதவியிலிருந்து விலகி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

மக்களவை தேர்தல் நெருங்கி யுள்ள நிலையில் 2 வாரங்களுக்கு முன் சிரோமணி அகாலிதளம் மீண் டும் பாஜகவுடன் கைகோர்த் தது. இரு கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு ஏறக் குறைய நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் விவசாயப் போராட்டம் தீவிரமாகியுள்ளதால் விவசாயிகள் போராட்டத்தின் முடிவைப் பொறுத்து பஞ்சாப்பில் தேர்தல் கூட்டணி அமையும் என்றும், தேவைப்பட்டால் மாயாவதியின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) ஆகிய கட்சியுடன் கூட்டணி அமைப் பது தொடர்பாக சிரோமணி அகாலி தளம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரோமணி அகாலி தளத்தின் இந்த திடீர் முடிவு பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment