எச்.அய்.வி. ஆலோசனை மய்யங்களை ஒன்றிய அரசு மூடுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 11, 2024

எச்.அய்.வி. ஆலோசனை மய்யங்களை ஒன்றிய அரசு மூடுவதா?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் எச்.அய்.வி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மய்யங்களை மூட ஒன்றிய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என கோருகிறோம்.

தமிழ்நாட்டில் – தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் 1994 இல் தொடங்கப்பட்டு – தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் தின் கீழ் ஆலோசகர்கள், ஆய்வக நுட்புனர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள், விபரக்குறிப்பு மேலாளர்கள், சமூகநல ஒருங்கிணைப்பாளர்கள், ஓட்டுநர்கள் உதவியாளர்கள் , மாவட்ட திட்ட மேலாளர், மாவட்ட மேற்பார்வையாளர், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் என பல பொறுப்பு களில் தமிழ்நாடு முழுவதும் 2,500 ஊழியர்களும் தேசிய அளவில் 25,000 ஊழியர்களும் 15 ஆண்டு களுக்கும் மேலாக ஒப்பந்த அடிப் படையில் பணி பாதுகாப்பின்றி பணிபுரிந்து வருகிறோம்.

எச்.அய்.வி. – எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணி மட்டுமில்லாது இத்துறையில் பணிபுரியும் நாங்கள் வளரிளம் பருவத்தின ருக்கான நல மய்யங்களையும், அவசர கால ஆற்றுப்படுத்துதல் மய்யப் பணிகளையும் செய்து வருகிறோம். கோவிட் தொற்றுக் காலத்தில் மன அழுத்தத்தில் இருந்த மக்களிடையே நேரடி யாகவும், அலைபேசியின் வாயிலாகவும் தொடர் ஆற்றுப்படுத்துதல் பணிகளை செய்து விழிப் புணர்வை ஏற்படுத்தினோம். இன்றைய காலகட்டத்தில் மன அழுத்த நோயின் காரணமாக தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. பெரு மளவிலான குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. இதனையெல்லாம் சரிசெய்ய முறையான ‘கவுன்சிலிங்’ (ஆற்றுப்படுத்துதல்) அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.
எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு ஊசியோ அல்லது முற்றிலும் குணப்படுத்த மருந்துகளோ கண்டு பிடிக்க படாத நிலையில் தற்பொழுது பிஜேபி அரசு இந்தியா முழுவதும் அரசு மருத்துவ மனைகளில் செயல்படும் 2100- நம்பிக்கை மய்யங்களை மூட மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு ஊசியோ அல்லது மருந்துகளோ* இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஒன்றிய அரசு எச்அய்வி ஆலோ சனை மற்றும் பரிசோதனை மய்யங்களை மூட முடிவு எடுத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்ட நோயாளி வாழ் நாள் முழுவதும் எய்ட்ஸ்க்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
மாத்திரைகள் சாப்பிடுவதை இடையில் நிறுத்தினால் நோயாளியிடம் இருந்து நோய் பரவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மய் யங்கள், மத்திய சிறைச்சாலை மருத்துவமனைகள், மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவ மனைகளில் செயல்படும் 377 எச்.அய்.வி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மய்யங்களில் 186 மய்யங்களை முதல்கட்டமாக மூட வேண்டும் என்று ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

தற்போது தமிழ்நாட்டில் 186 மய்யங்களை மூடவேண்டும் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திற்கு சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளது. உலகச் சுகாதார நிறுவனம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஆலோசனை மய்யங்களையும் பரிசோதனைக் கூடங்களையும் அதிகரிக்க வேண்டுமென வழி காட்டியுள்ள சூழலில் ஒன்றிய அரசின் மேற்கண்ட முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

எச்.அய்.வி. பரிசோதனை மற்றும் ஆலோ சனை மய்யங்களை மூடினால் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்படும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொய்வும், எய்ட்ஸ் தொற்றாளி களுக்கு கிடைக்கும் ஆலோசனைகளும், உதவிகளும் கூட தடைபடும்.
மேலும் எச்.அய்.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு எடுத்துக் கொள்ளத் தவறும் பட்சத்தில் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எச்.அய்.வி. தோற்றால் பாதிக்கப்பட்ட கர்ப் பிணிகள் மூலம் அவர்களுடைய கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது. தொடர் ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் மூலமே எச்.அய்.வி. தொற் றில்லா குழந்தைகளை பெறமுடியும். இவ்வாறான நிலையில் ஆலோசனை மய்யங்களை முதல் கட்ட ரத்த பரிசோதனை மய்யங்களாக மட்டும் மாற்றினால், அவர்களுக்கு கிடைக்க கூடிய ஆலோசனை முற்றிலும் தடைபடும்.
ஆனால் தமிழ்நாட்டில் 186 நம்பிக்கை மய்யங்களை திடீரென மூடினால் சாமானிய மக்களால் இலவசமாக எச்.அய்.வி பரிசோ தனையை செய்ய முடியாது. எனவே அவர்கள் வலுக் கட்டாயமாக தனியார் மருத்துவமனைகளை நோக்கி நகர்வார்கள். பலர் பரிசோதனையை தவிர்க்கக்கூடும். இது எச்.அய்.வி/ எய்ட்ஸ் நோய் பாதிப்பை மேலும் அதிகரிக்கும். எனவே இந்த மய்யங்களை மூடும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட்டு, புதிய வடிவிலான திட்டங்களை வரையறுத்து தொடர்ந்து செயல்பட வைக்க வேண்டும் என்று பணியாளர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் 10-8-2023 அன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் த. தமிழச்சி தங்கபாண்டியன், அவர்கள் ஒன்றிய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் அவர்களை நேரில் சந்தித்து 186- நம்பிக்கை மய்யங்களை மூடும் நடவடிக் கையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதில், “எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு அளித்த பின்னரும் நாட்டில் சுமார் 23 லட்சம் பேர் எய்ட்ஸ் தொடர்பான எச்.அய்.வி நோய்த்தொற்றுடன் உள்ளனர். தமிழ்நாட்டில்
1.43 லட்சம் பேர் உள்ளனர். எச்.அய்.வி – எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவேண்டிய சூழ்நிலையில் பரிசோதனை மய்யங்களை மூடினால், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படும். எச்.அய்.வி. – எய்ட்ஸ் பெரும்பாலும் விளிம்புநிலை பெண்களின் பிரச்சினையாக இருக்கிறது. அதற் கான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. தற்போது கர்ப்பிணிகளுக்கு எச்.அய்.வி. பரிசோதனை 100 சதவீதம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் எச்.அய்.வி. ஆலோசனை மற்றும் பரிசோதனை மய்யங்களை மூடுவதற்கான உத்தரவை உடடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று” வலியுறுத்தி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ் வுத்துறையின், மருத்துவத்துறையின் சிறந்த மருத்துவ சேவைகளை, நோக்கங்களை சிதைக் கின்ற ஒன்றிய அரசின் தவறான போக்குகளுக்கு

இடமளிக்க கூடாது எனவும், ஏழை, எளிய மக்களின் நலன் கருதி நம்பிக்கை மய்யங்களை மூட மாட்டோம் என தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக அறிவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்த தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

எம்.ஜெயந்தி (மாநில தலைவர்)
மா.சேரலாதன் (மாநில பொதுச்செயலாளர்)
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு
அனைத்து ஊழியர்கள் நலச் சங்கம்

No comments:

Post a Comment