வழக்கு இல்லாமலேயே சோதனையா? அரசியல் ஆதாயத்திற்காக குறி வைக்கும் அமலாக்கத்துறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 11, 2024

வழக்கு இல்லாமலேயே சோதனையா? அரசியல் ஆதாயத்திற்காக குறி வைக்கும் அமலாக்கத்துறை

பெங்களூரு, பிப்.11 மக்களவைத் தேர்தலுக்கு முன் அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அமைப்புகள் மூலம் “இந்தியா” கூட்டணி தலைவர்களுக்கு நெருக்கடி அளிக்க மோடி அரசு பல்வேறு சதி திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அரசியல் ஆதா யத்துக்காக கருநாடக மாநிலம் பெல் லாரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நர பரத் ரெட்டியை குறிவைத்து 10.2.2024 அன்று காலை 6:30 மணி முதல் அம லாக்கத்துறை சோதனை நடத்தி வரு கிறது. எந்த வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுகிறது என அமலாக்கத்துறை எவ்வித தகவலும் அளிக்காத நிலையில், பெல்லாரி, சென்னை பகுதி என மொத்தம் 6 இடங்களில் அம லாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாஜக கோட்டையை தகர்த்ததற்காக

வடகிழக்கு கருநாடகாவில் பாஜக விற்கு பிரம்மாண்ட வாக்கு வங்கியுள் ளது. அதாவது அந்த பிராந்திய பகுதி யின் தொகுதிகள் அனைத்தும் பாஜக வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்தது.

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் ஆதிக்கத்தை தகர்த்து பெல்லாரி தொகுதியில் ஜனார்த் தன ரெட்டியின் குடும்ப வேட்பாளரை வீழ்த்தி முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார் நரபரத். வரவிருக்கும் மக்க ளவை தேர்தலிலும் பரத் ரெட்டி ஆதிக் கம் செலுத்துவார் என்பதால் வழக்கு விபரம் கூட இல்லாமல் அவருக்கு எதி ராக அமலாக்கத்துறை ஏவப்பட் டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

No comments:

Post a Comment