தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் எத்தனை முறை தான் கடிதம் எழுதுவது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 19, 2024

தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் எத்தனை முறை தான் கடிதம் எழுதுவது?

featured image

சென்னை,பிப்.19– தமிழ்நாடு மீன வர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.2.2024) சமூக வலைத் தளப் பதிவு மூலம் பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கும் வலி யுறுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளப் பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங் கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாவது மிகுந்த கவலையளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், இத்தகைய கைது நடவடிக்கைகள் மிகவும் அதிகரித்திருக்கின்றன; இக்காலத் தில் 69 மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இதைவிட அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், மூன்று மீன வர்களை ‘மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர்’ (Habitual Offender)  பட்டியலில் அநியாயமாகச் சேர்த்து விடுவிக்காமல் தொடர்ந்து சிறை யில் அடைத்திருப்பதுதான். இது நமது மீனவர்களின் வாழ்வா தாரத்தை பாதிப்பது மட்டுமல்லா மல், அவர்களது படகுகளை நாட்டுடைமையாக்கும் இலங்கை அரசின் செயல் சிறுகச் சிறுகச் சேர்த்த சேமிப்புகளையும் அழிக் கிறது.
இந்தியப் பிரதமர் அவர்களும், மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களும் உடனடியாக இதில் தலையிட்டு நமது மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதையும் அவர்களது படகுகள் விடுவிக்கப் படுவதையும் உறுதிசெய்திட வேண் டும் எனத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதனை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, நமது மீனவர் களின் நலனைக் காக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையை எடுத் திட வேண்டும்.
ஏனென்றால், அவர்கள் தமிழர் கள் மட்டுமல்ல, பெருமைமிகு இந்தியர்களும் கூட!
-இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment