கரோனா பாதிப்புக்கு பிறகு நுரையீரல் பாதிப்பு இந்தியாவில் அதிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 20, 2024

கரோனா பாதிப்புக்கு பிறகு நுரையீரல் பாதிப்பு இந்தியாவில் அதிகம்

புதுடில்லி, பிப்.20 கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றி உலகெங்கும் பரவிய கரோனா வைரஸ் தாக்குதல் 2020 மார்ச் மாத காலகட்டத்தில் இந்தியாவிலும் பரவியது.
கோவிட் பெருந்தொற்று பரவலை தடுக்க அரசு கொண்டு வந்த நாடு தழுவிய பொது முடக்கத்தினால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்தனர். ஆனாலும், அடுத்தடுத்த மாதங்களில் இந்தியாவில் வெகுவேகமாக லட்சக்கணக்கான மக்கள் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்.

2021 ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய மருந்து நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசியை ஒன்றிய அரசு இலவசமாக அனைவருக்கும் வழங்க தொடங்கியது. மக்கள் முன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டதால் சிறிது சிறிதாக நிலைமை கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், வேலூரில் உள்ள கிறித்துவ மருத்துவ கல்லூரி (Christian Medical College) கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான இந்தியர்களின் நுரையீரல் திறன் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு, “அய்ரோப்பியர்கள் மற்றும் சீனர்கள் ஆகியோரு டன் ஒப்பிட்டால், கரோனா தாக்குதலுக்கு உள்ளான இந்தியர்களின் நுரையீரல் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு சிலருக்கு காலப்போக்கில் இந்த பாதிப்பு சரியாகலாம்; ஆனால், பலருக்கு அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் தொடரும் ஒரு நிரந்தர பாதிப் பாகத்தான் இது இருக்கும்” என தெரிவிக்கிறது.

“பப்ளிக் லைப்ரரி ஆஃப் சைன்ஸ்” (றிலிளிஷி) எனும் லாப நோக்கற்ற அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வு கட்டுரைக்காக பங்கேற்ற நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பலவித பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டார்கள்.

“அனைத்து விதமான பரிசோதனைகளிலும், அயல்நாட்டினருடன் ஒப்பிட்டால் இந்தியர் களின் நுரையீரல் திறன் மிக குறைவாக இருந்தது” என கிறித்துவ மருத்துவ கல்லூரியின் நுரையீரல் மருத்துவ துறையின் பேராசிரியர் டி. ஜே. கிறிஸ் டோபர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment