'திராவிட மாடல்' அரசுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு காதர் மொகிதீன் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 19, 2024

'திராவிட மாடல்' அரசுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு காதர் மொகிதீன் உறுதி

featured image

சென்னை, பிப்.19 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் அளித்த பேட்டி: சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அளித்த கல்வி உதவி தொகையை பாஜக அரசு நிறுத்தி விட்டது. வசதி யற்ற லட்சோப லட்சம் சிறு பான்மை மாணவர்கள் கஷ்டப் படுவதை அறிந்து அந்த உதவித் தொகையை மாநில அரசே அளிக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இஸ்லாமியர்களின் காதில் இன்ப தேன் ஊற்றியுள்ளார்.
இது இஸ்லாமியர்கள் வாழ்நாளெல்லாம் நன்றி சொல்லும் அறிவிப்பு. பள்ளிவாசல் கட்ட அலைக்கழித்து வந்ததற்கு நிரந்தர தீர்வை முதலமைச்சர் அறிவித்து உள்ளார். இதற்காக ஓட்டுமொத்த முஸ்லிம்கள் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி. இந்த உலகின் இறுதி நாள் வரை திராவிட மாடல் அரசுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்போம்.

மேகதாது அணை: கருநாடக மாநில அரசுக்கு இரா.முத்தரசன் கண்டனம்
சென்னை,பிப்.18- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு,
மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டிருப்பதாக கரு நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா அறிவித் துள்ளார். கடந்த 12ஆம் தேதி கருநாடக மாநில சட்டப் பேரவையில் 2024 – 2025 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போது மேகதாது அணை கட்டுவதில் கருநாடக அரசு உறுதியாக இருக்கிறது. அதற்கான முறையில் ஒரு மண்டலக் குழுவும், இரண்டு துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு நான்கு மாநிலங்கள் – கருநாடகம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி – தொடர்புடைய பிரச்சினையாகும்.
கடந்த 1974 ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சென்னை மாகாண அரசு, மைசூர் அரசுடன் 1924 ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தம். காலத்தில் புதுப்பித்திருந்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதல் தண்ணீர் கிடைத்திருக்கும். அப்போதிருந்த காங்கிரஸ் மாநில அரசும், ஒன்றிய அரசும் அளித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
1974 ஆண்டு முதல் காவிரி நதிநீர் உரிமையை நிலை நாட்ட தமிழ்நாடு சட்ட ரீதியாகவும், நேரடியாகவும் போராடி வருகின்றது.
காவிரி நதி நீர் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பும், இதன் மீதான மேல் முறையீடுகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி உத்தரவையும் மதித்து நடக்க வேண்டிய கருநாடக மாநில அரசு, பெங்களூரு நகரக் குடிநீர் கோரிக்கையை ஆயுதமாக்கி. தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை அடியோடு பறித்து விடும் திசை வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதில் கட்சி வேறுபாடு இல்லாமல் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதன் மீது ஒன்றிய அரசும் தலையிட மறுத்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மேகதாது அணை தொடர்பான பிரச்சினையை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் என்ற கருநாடகத்தின் முன் மொழிவுக்கு தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கருநாடக முதலமைச்சர் அறிவிப்பு மாநிலங்களிடையே நிலவும் நல்லுறவுக்கு வலுச் சேர்க்காது. கூட்டாட்சி கோட்பாட்டுக்கும் எதிரானது என்பதை கருநாடக மாநில அரசும், மக்களும் உணர வேண்டும். சுமூக உறவுக்கு குந்தகம் ஏற்படுத்தும் கருநாடக மாநில முதலமைச்சரின் அறிவிப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.

 

No comments:

Post a Comment