என்று தொலையும் இந்த ஆன்லைன் வர்த்தகம்? மேலும் ஒரு அரசு ஊழியர் தற்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 23, 2024

என்று தொலையும் இந்த ஆன்லைன் வர்த்தகம்? மேலும் ஒரு அரசு ஊழியர் தற்கொலை

featured image

நெல்லை,பிப்.23- ஆன்லைன் வர்த்தகத்தில் பண இழப்பு ஏற்பட் டதால் திருநெல்வேலியில் அரசு ஊழியர் விஷம் குடித்து தற் கொலை செய்துகொண்டார்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. ஏ காலனியைச் சேர்ந்தவர் கண்ணன். உள்ளாட்சி தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. இத் இணையருக்கு ஒரு மகள் உள்ளார். கண்ணன் கடந்த 16 ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றாராம். பின்னர் அவர், வீடு திரும்பவில்லையாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித் தனர். இந்நிலையில், ரெட்டி யார்பட்டி மலையடிவாரப் பகுதியில் அவர் விஷம் குடித்து இறந்து கிடப்பது தெரியவந்தது.
காவல்துறையினர் அவரது சட லத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கண்ணன் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வர்த் தகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், அதில் பண இழப்பு ஏற்பட்டு கடன் சுமை அதிகரித்ததால் இந்த முடிவைத் தேடிக்கொண்டதும் தெரியவந்தது. மேலும், அவரது சட்டைப் பையில் இருந்த கடிதத் தில், எனது சாவிற்கு யாரும் கார ணம் இல்லை; கடன்சுமை எனக்கு அதிகமுள்ளது என குறிப்பிட்டி ருந்ததாக காவல்துறை வட் டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment